முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓட்டுநர் உரிமம் வழங்கக் கோரிய டி.டி.எப். வாசன் மனு தள்ளுபடி

செவ்வாய்க்கிழமை, 12 ஆகஸ்ட் 2025      தமிழகம்
TTF-Vasan 2025-08-12

Source: provided

சென்னை : ஆபத்தான முறையில் பைக் ஓட்டிய டி.டி.எப். வாசன் ஓட்டுநர்  உரிமம் தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் டி.டி.எப். வாசன். இவர் பைக்கில் சாகசப் பயணங்கள் மேற்கொண்டு, அவற்றை யூடியூப்பில் பதிவேற்றுவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார். அவரது வீடியோக்களை பார்த்த இளம் வயதினர் பலரும் அவரை சமூக வலைத்தளங்களில் அதிகம் பின் தொடர்ந்தனர். டி.டி.எப். வாசன் ஆபத்தான முறையில் பைக் ஓட்டி வந்ததால், அவர் மீது போக்குவரத்து விதிகளை மீறியதாகப் பல வழக்குகள் பதிவாகியுள்ளன.

தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டதால், டி.டி.எப். வாசனின் வாகன ஓட்டுநர் உரிமத்தை காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரத்து செய்து உத்தரவிட்டார். அவரது ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, டி.டி.எப். வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், டிடிஎஃப் வாசனின் கோரிக்கையை ஏற்க மறுத்ததோடு, இது தொடர்பாக உரிய அதிகாரிகளை அணுக வேண்டும் எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து