முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: ஜஸ்பிரித் பும்ரா விளையாடுகிறார்

செவ்வாய்க்கிழமை, 12 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Bumra 2025-08-12

Source: provided

மும்பை : ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கும் நிலையில் இந்திய அணியில ஜஸ்பிரித் பும்ரா விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செப். 9-ம் தேதி...

8 அணிகள் இடையிலான 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் இந்தியா...

அதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.

பாகிஸ்தானை....

இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ம் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது.

விளையாடுகிறார்...

இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியான தகவலின் படி, ஆசிய கோப்பையில் ஜஸ்பிரித் பும்ரா விளையாட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஆசிய கோப்பை நிறைவடைந்தவுடன் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் (2 போட்டிகள்) முதல் போட்டியை அவர் தவற விட உள்ளதாக கூறப்படுகிறது. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து