முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசு கட்சியின் திட்டத்தை நிராகரித்தார் ஒபாமா

புதன்கிழமை, 16 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், அக். 17 - குடியரசு கட்சியின் கடன் நெருக்கடிக்கு தீர்வு காணும் திட்டத்தை ஒபாமா நிராகரித்ததால் அமெரிக்காவில் நெருக்கடி நீடிக்கிறது. 

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பட்ஜெட்டுக்கு குடியரசு கட்சி ஒப்புதல் தர மறுத்தது. மேலும் அமெரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கடன் உச்ச வரம்பை உயர்த்தவும் குடியரசு கட்சி மறுத்து விட்டது. அக்டோபர் 17 ம் தேதிக்குள் கடன் உச்சவரம்பை உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். 

இந்நிலையில் அமெரிக்காவில் நிலவி வரும் நெருக்கடியை சமாளிக்க எதிர்க்கட்சியான குடியரசு கட்சி புதிய யோசனைகள் அடங்கிய திட்டத்தை வழங்கியது. ஆனால் இதனை ஒபாமா நிராகரித்து விட்டார். இதனால் அங்கு பொருளாதார நெருக்கடி நீடிக்கிறது. இதனால் அங்குள்ள அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது பற்றி வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் அமி பிராண்டே கூறும் போது, ஜனநாயக கட்சியும் குடியரசு கட்சியும் நல்ல நம்பிக்கையுடன் செயல்பட்டு நெருக்கடிக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்றார். 

ஒபாமா விரைவில் ஜனநாயக கட்சியினருடன் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் குடியரசு கட்சி இந்த விவகாரம் தொடர்பாக விவாதித்தது. அப்போது பிப்ரவரி மாதம் வரையிலாவது நாட்டின் கடன் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் கடனுக்கான உச்சவரம்பை 16 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலராக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago