முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒண்டிவீரன் நினைவுநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2025      தமிழகம்
CM-RN-Ravi 2025-08-20

Source: provided

சென்னை : ஒண்டிவீரன் நினைவுநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளனர்.இது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொடுங்கோல் காலனித்துவ ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி மகத்தான தியாகம் செய்த அச்சமற்ற தளபதி, தொலைநோக்குத் தலைவர் மற்றும் வீரமிக்க சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்துகிறோம். அவரது ஈடு இணையற்ற துணிச்சலும் தியாகமும் நமது நாட்டின் நீண்ட சுதந்திரப் போராட்டத்துக்கு உத்வேகம் அளித்தன. அவரது நீடித்த மரபு, மீள்தன்மை மற்றும் சுயசார்பு வளர்ச்சியடைந்தபாரதம் 2047- ஐ உருவாக்க நம்மை தொடர்ந்து வழிநடத்துகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆங்கிலேயருக்கு நெல்லைக் கப்பமாகக் கட்டமறுத்து, நெற்கட்டும்செவலை நெற்கட்டான்செவலாக மாற்றி, அந்நிய ஆதிக்கத்திற்குச் சவால் விட்ட தென்மலைப் போரின் மாவீரர் ஒண்டிவீரனின் நினைவுநாளில் அவருக்கு என் வீரவணக்கம்.

சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலை உணர்வோடு தென்தமிழ்நாட்டின் தீரர்களான பூலித்தேவனும் படைத்தளபதி ஒண்டிவீரனும் போர் செய்தனர் எனும் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து