முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த.வெ.க. மாநாட்டை முன்னிட்டு மதுரையில் டாஸ்மாக் கடைகள் இன்று மூடல்: மாவட்ட கலெக்டர்

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2025      தமிழகம்
TVK-1 2025-08-20

Source: provided

மதுரை : மதுரையில் நேற்று த.வெ.க. மாநாட்டை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடவும் சாலையோர வியாபாரிகளுக்கு கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை அருகே உள்ள பாரபத்தியில் இன்று நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று காலை முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் மாநாடு திடலில் குவிய தொடங்கி உள்ளனர். பெண்கள் உட்பட லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் மாநாட்டு நடைபெறும் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் 3000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் மாநாட்டை முன்னிட்டு குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக பாரப்பத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று ஒரு நாள் மட்டும் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் அறிவித்துள்ளார்.

அதன்படி மாநாட்டு நடைபெறும் திடலை ஒட்டியுள்ள கூடக் கோவில், மேல உப்பிலிக்குண்டு சந்திப்பு, தூம்பைக்குளம், கள்ளிக்குடி, சிவரக்கோட்டை, வலையங்கு ளம் டோல்கேட், திருமங்கலம்-உசிலம்பட்டி சந்திப்பு, ஆலம்பட்டி, மொட்டமலை, தோப்பூர், அருப்புக்கோட்டை ரோடு சந்திப்பு, சிவரக்கோட்டை, திருமங்கலம்-உசிலம்பட்டி சந்திப்பு, கூத்தியார்குண்டு ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று ஒருநாள் அடைக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழக மாநாட்டை முன்னிட்டு பாரபத்தியில் திடீர் கடைகள் முளைத்துள்ளன. மாநாடு நடைபெறும் பகுதி மற்றும் சாலைகளில் சிறிய உணவு கடைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கு போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். மாநாடு நடைபெறும் பகுதியில் கடை அமைப்பவர்கள் வாகனங்கள் செல்லும் வழியில் ஆக்கிரமித்து அமைக்கக்கூடாது என கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடையூறாக அமைக்கப்பட்டால் கடைகள் அகற்றப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

கடந்த முறை விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டின்போது கடைகள் எதுவும் இல்லாததால் மாநாட்டிற்கு வந்த ஏராளமானோர் தண்ணீர் பாட்டில், உணவு உள்ளிட்டவர்களை வாங்க முடியாமல் தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து