முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை கிரிக்கெட்: கில்லுக்கு துணை கேப்டன் பதவி கொடுத்தது சரியானது- கவாஸ்கர்

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2025      அரசியல்
Gavaskar 2023-10-22

புதுடெல்லி, கில்லுக்கு துணை கேப்டன் பதவி கொடுத்தது சரியானது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபியில் நடக்கிறது.

இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. ஐ.பி.எல். போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐய்யருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை தேர்வு செய்யாமல் நிராகரித்தனர்.

அதேநேரத்தில் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லுக்கு 20 ஓவர் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. அக்க்ஷர் படேலின் துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. 20 ஓவர் அணியில் ஷ்ரேயாஸ் ஐய்யருக்கு வாய்ப்பு கொடுக்காததால் முன்னாள் வீரர்கள் பலர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவை விமர்சித்துள்ளனர்.

இந்த நிலையில் 20 ஓவர் அணிக்கு சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டதை முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். அவருக்கு துணை கேப்டன் பதவி கொடுத்தது சரியே என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கவாஸ்கர் கூறியதாவது:-

சுப்மன் கில் சில வாரங்களுக்கு முன்பு தான் டெஸ்டில் 750 ரன்களுக்கு மேல் குவித்தார். அதுமாதிரி நல்ல நிலையில் இருக்கும் ஒரு வீரரை நீங்கள் ஒதுக்கி வைக்க முடியாது. துணை கேப்டன் பதவி வழங்குவது எதிர்காலத்தில் 20 ஓவர் அணியை வழி நடத்த முடியும் என்பதை அவருக்கு உணர்த்தும் ஒரு வழிமுறையாகும். இது மிகவும் சிறந்த தேர்வு என்று நான் நினைக்கிறேன்.

இங்கிலாந்தில் முதல் முறையாக டெஸ்ட் அணியை வழி நடத்தி 750-க்கும் மேற்பட்ட ரன்களை சுப்மன் கில் குவித்தது பாராட்டதக்கதாகும். அவர் நெருக்கடியை எப்படி கையாண்டார் என்பதை பார்த்தோம். துணை கேப்டன் பதவி எதிர்கால கேப்டன் பதவிக்கான தெளிவான அறிகுறியாகும்.

இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

இதற்கிடையே சுப்மன் கில்லை தேர்வு செய்வது தொடர்பாக தமிழக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். எந்த அடிப்படையில் அவர் 20 ஓவரில் தேர்வு செய்யப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து