முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை தொடர்: ஷ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு மறுப்பு: கொந்தளித்த முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த்

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Srikanth 2025-08-20

டெல்லி, ஆசிய கோப்பையில் ஷ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந்தேதி துபாயில் சந்திக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப் பட்டது. இதில் கேப்டனாக சூர்யகுமார் யாதவ், துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அணியின் இடமில்லை என அஜித் அகர்கர் கூறுவது அபத்தமாக உள்ளது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:- ஷ்ரேயஸ்-க்கு அணியில் இடமில்லை என அஜித் அகர்கர் கூறுவது அபத்தமாக உள்ளது. தற்போதைய பார்ம் வைத்து பார்த்தால் ஷ்ரேயஸ் கண்டிப்பாக அணியில் இருந்திருக்க வேண்டும். கடந்த ஐ.பி.எல்-ல் 600 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.. பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். என ஸ்ரீகாந்த் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து