முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை த.வெ.க. மாநாடு: 100 அடி கொடிக்கம்பம் கீழே விழுந்ததால் திடீர் பரபரப்பு

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2025      தமிழகம்
TVK 2025-08-20

Source: provided

மதுரை : மதுரை த.வெ.க. மாநாட்டில் நடப்பட முயன்ற  100 அடி கொடிக்கம்பம் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. “வெற்றி பேரணியில் தமிழ்நாடு” என்ற கொள்கை முழக்கத்துடன், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு  மதுரை பாரபத்தியில் இன்று  பிரமாண்டமாக நடைபெறுகிறது.

இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியும் இப்படிப்பட்ட மாநாட்டை நடத்தியதில்லை என்று சொல்லும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 506 ஏக்கரில் மாநாட்டு திடல், 2 பார்க்கிங் இடங்கள், 1.5 லட்சம் பேர் அமர இருக்கைகள், தொண்டர்கள் அமரும் இடங்களிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பெண்களுக்கான “பிங்க் ரூம்” வசதி என ஒவ்வொன்றையும் மேற்பார்வையிட மேலாண்மை குழு அமைத்து த.வெ.க. அமல்படுத்தியுள்ளது.

மாநாட்டு முகப்பில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு, மாநாடு தொடங்கும் போது கொடியை விஜய் ஏற்றி வைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக கொடிக்கம்பத்தை ராட்சத கிரேன் மூலம் நடப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம் கீழே விழுந்தது. த.வெ.க. நிர்வாகியின் கார் மீது கொடிக்கம்பம் விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கிரேனில் உள்ள பெல்ட் அறுந்தததில் கொடிக்கம்பம் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கீழே விழுந்த கொடிக்கம்பத்தை மீட்டு அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து