முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூருவில் தெருநாய் கடித்து ரேபீஸ் நோயால் பாதித்த சிறுமி பலி

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2025      இந்தியா
Dog 2025-08-20

Source: provided

பெங்​களூரு : பெங்களூருவில் தெருநாய் கடித்து ரேபீஸ் நோயால் பாதித்த 4 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

பெங்​களூரு​வில் 4 வயது குழந்தையை தெரு நாய் கடித்​த​தில் ரேபீஸ் நோய் தாக்​கி, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கர்​நாடக மாநிலத்​தில் தெரு நாய் தொல்லை நாளுக்கு நாள் அதி​கரித்து வருகிறது.

நிகழாண்​டில் ஜூலை வரை 2.81 லட்​சம் பேர் நாய்க்​கடிக்கு ஆளாகி​யுள்​ளனர். 26 பேர் உயி​ரிழந்​துள்​ள​தாக புள்ளி விவரம் தெரிவிக்கின்​றது. எனவே தெரு​நாய்​களை கட்​டுப்​படுத்த வேண்​டும் என லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்​.​பாட்​டீல் அண்​மை​யில் உத்தர​விட்​டார்.

இதனிடையே கடந்த ஏப்​ரலில் பெங்​களூரு​வில் உள்ள தாவரகெரேவைச் சேர்ந்த கதிரா பானு (4) என்ற பெண் குழந்தை தனது வீட்டுக்கு வெளியே விளை​யாடிக் கொண்​டிருந்​தது. அப்​போது தெரு​நாய் கடித்​த​தால் அதிர்ச்சி அடைந்த பெற்​றோர் அரு​கிலுள்ள மருத்​து​வ​மனை​யில் குழந்​தையை சிகிச்​சைக்​காக அனு​ம​தித்​தனர்.

ஆனால் அடுத்த ஒரு மாதத்​தில் கதிரா பானுவுக்கு ரேபீஸ் நோய் பாதிப்பு ஏற்​பட்​டது. இதையடுத்து அவர் மருத்​துவமனையில் சிகிச்​சைக்​காக அனு​ம​திக்​கப்​பட்​டு, ரூ.3 லட்சத்துக்கும் அதிக​மாக பண‌ம் செலவு செய்யப்பட்டது.

ஆனால் உடல்​நிலை​யில் முன்​னேற்​றம் ஏற்​ப​டாத​தால் அந்த குழந்தை பெங்​களூரு ராஜீவ் காந்தி அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக அனு​ம​திக்​கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி கா​திரா பானு கடந்த 3 தினங்களுக்கு முன்பு இரவு பரி​தாப​மாக உயி​ரிழந்​தார்​.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து