எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நெல்லை: பா.ஜ.க. பூத் கமிட்டி முதல் மண்டல மாநாடுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா இன்று நெல்லை வருகிறார்.
தமிழக சட்டசபைக்கு இன்னும் 8 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்க தி.மு.க.வும், தி.மு.க. கூட்டணியை வீழ்த்தி அரியணை ஏற அ.தி.மு.க.வும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. கட்சி இம்முறை அதிக தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற திட்டமிட்டு உள்ளது.
குறிப்பாக உள்துறை மந்திரி அமித்ஷா தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறவும், அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி 200 தொகுதி களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் வியூகம் வகுத்து வருகிறார்.
இதற்காக அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பதற்கு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே கட்சியை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்ஒரு பகுதியாகவும், சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையிலும் பா.ஜ.க. கட்சியின் பூத் கமிட்டி மண்டல மாநாடு தமிழ்நாடு முழுவதும் 7 இடங்களில் நடைபெற உள்ளது.
இதன் முதல் மாநாடு நெல்லையில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
இதையொட்டி நெல்லை வண்ணார்பேட்டை சத்திரம் புதுக்குளம் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அருகே பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 5 பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய 28 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 8,595 பூத் கமிட்டிகளை சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
மாநாட்டில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன் முன்னாள் மாநில தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
மாநாட்டில் பங்கேற்பதற்காக அமித்ஷா கேரள மாநிலம் கொச்சியில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கி ருந்து ஹெலிகாப்டர் மூலம் 3.10 மணிக்கு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து 3.25 மணிக்கு மாநாட்டு மேடைக்கு காரில் செல்கிறார்.
மாநாட்டில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரையாற்றுகிறார். அப்போது, மத்திய பா.ஜ.க. அரசு தமிழக மக்களுக்கு அளித்த எண்ணற்ற மக்கள நலத்திட்டங்களையும், பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் திட்டங்களின் மூலம் தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து பணி செய்ததை ஒவ்வொருவரும் தங்களுடைய பூத்தில் உள்ள பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது குறித்து விரிவாக பேச உள்ளார்.
மேலும், ஒவ்வொரு பூத்திலும் 50 சதவீத வாக்குகளை பெறுவதற்காக தீவிரமாக பணியாற்றுவது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கியும், வருகிற சட்டமன்ற தேர்தலை பா.ஜ.க. தொண்டர்கள் எதிர்கொள்வதற்கான தெளிவான பாதையை காட்டி பேசுவார் என நிர்வாகிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதோடு, சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.
உள்துறை மந்திரி அமித்ஷா வருகையால் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அமித்ஷாவை வரவேற்று நெல்லை மாநகரில் அதிக அளவில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்பேரில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 11 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-08-2025.
21 Aug 2025 -
இளம் காங்கிரஸ் தலைவர்கள் திறமையானர்கள்: பிரதமர் மோடி
21 Aug 2025டெல்லி, இளம் காங்கிரஸ் தலைவர்கள் திறமையானர்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
ரகுமான் பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
21 Aug 2025சென்னை, ரகுமான்கானின் பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
சென்னையில் 11 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
21 Aug 2025சென்னை, சென்னையில் இன்று 11 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடங்கப்படுகிறது.
-
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா நிறைவேற்றம்
21 Aug 2025புதுடெல்லி, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
-
ரூ.67 ஆயிரம் கோடியில் 97 தேஜஸ் போர் விமானங்கள் - மத்திய அரசு ஒப்புதல்
21 Aug 2025புதுடெல்லி, ரூ.67 ஆயிரம் கோடியில் 97 தேஜஸ் போர் விமானங்கள் - மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
-
பிரதமர், மாநில முதல்வர்களின் பதவியை பறிக்கும் மத்திய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
21 Aug 2025சென்னை, பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் வழக்கில் சிக்கி 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை நீக்கம் செய்வதற்கான சட்டமசோதா நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் த
-
ஆக. 26-ம் தேதி முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்
21 Aug 2025சென்னை, 26-ம் தேதி முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
அமைச்சரவையின் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு: மத்திய அரசு
21 Aug 2025புதுடெல்லி, அமைச்சரவையின் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு என மத்திய அரசு வாதம்
-
யுரேனஸ் கிரகத்தை சுற்றும் புதிய நிலா கண்டுபிடிப்பு
21 Aug 2025வாஷிங்டன்: யுரேனஸ் கிரகத்தை சுற்றும் புதிய நிலா கண்டுபிடிக்கப்பட்டது.
-
அமெரிக்காவின் டாப் 10 பட்டியலில் இருந்த பெண் இந்தியாவில் கைது..!
21 Aug 2025அமெரிக்கா: அமெரிக்காவின் எப்.பி.ஐ.-ஆல் தேடப்பட்டு வரும் டாப் 10 பட்டியலில் இருந்த பெண் இந்தியாவில் கைது..!
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைப்பு
21 Aug 2025தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
-
உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டும்: ஜே.டி.வான்ஸ்
21 Aug 2025வாஷிங்டன்: உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
-
வர்த்தக பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தல்
21 Aug 2025மாஸ்கோ: வர்த்தக பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தப்பட்டது.
-
ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும்: நிக்கி ஹேலி
21 Aug 2025நியூயார்க்: இந்தியாவை மதிப்புமிக்க சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும் என்று நிக்கி ஹேலி கூறினார்.
-
இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல, ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும் த.வெ.க. கூட்டத்தில் விஜய் அதிரடி பேச்சு
21 Aug 2025மதுரை: த.வெ.க. கூட்டத்தில் விஜய் இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும் என்று பேசினார்.
-
த.வெ.க. மாநாட்டில் தொண்டர்களிடம் விஜய் சொன்ன குட்டி கதை
21 Aug 2025மதுரை: த.வெ.க.மாநாட்டில் விஜய் தனது வழக்கமான பாணியில் குட்டிக் கதை ஒன்றை கூறினார். விஜய் சொல்லிய குட்டிக்கதை வருமாறு: "ஒரு குட்டிக்கதை சொல்றேன்.
-
தேசிய சீனியர் தடகள போட்டி: தமிழக அணிக்கு 7 பதக்கம்
21 Aug 2025சென்னை: தேசிய சீனியர் தடகள போட்டியில் தமிழக அணிக்கு 7 பதக்கம் வழங்கப்பட்டது.
-
ராகுல் வாகன ஓட்டுநருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு
21 Aug 2025நவாடா: கான்ஸ்டபிள் மீது வாகனம் மோதிய விவகாரம்; ராகுல் காந்தியின் வாகன ஓட்டுநருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
-
ஐதராபாத்-சென்னை புல்லட் ரெயில் பாதை அமைக்க ஆய்வு
21 Aug 2025திருப்பதி: ஐதராபாத்-சென்னைக்கு புல்லட் ரெயில் பாதை அமைக்க ஆய்வு நடத்தப்படுகிறது.
-
வெள்ள பாதிப்பில் இருந்து இயல்பு நிலை திரும்பும் மும்பை
21 Aug 2025மும்பை: வெள்ள பாதிப்பில் இருந்து இயல்பு நிலைக்கு மும்பை திரும்பி கொண்டு இருக்கிறது.
-
தெரு நாய்கள் விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
21 Aug 2025டெல்லி: தெரு நாய்கள் விவகாரம் குறித்து அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
-
அஜித் அகர்கரின் பதவிக்காலம் நீட்டிப்பு
21 Aug 2025டெல்லி: அஜித் அகர்கரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
-
மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற பெண் அதிகாரி மீது தாக்குதல் - நயினார் நாகேந்திரன் கண்டனம்
21 Aug 2025நெல்லை: மணல் கடத்தலை தடுக்க முயன்ற பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நயினார் நாகேந்திரன் பேச்சு
-
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலை தள்ளுபடி செய்து ரஷ்ய அறிவிப்பு
21 Aug 2025மாஸ்கோ: அமெரிக்காவிடமிருந்து பல்வேறு கட்ட அழுத்தம் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5 சதவீத தள்ளுபடியில் தொடரும் என்று இந்தியாவுக்க