முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 11 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Unkalutan-Stalin

சென்னை, சென்னையில் இன்று 11 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடங்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று (22.08.2025) 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று (22.08.2025) திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-11ல் எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள ஶ்ரீராம் தயாள் கேம்கா விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் கல்லூரி, மணலி மண்டலம் (மண்டலம்-2), வார்டு-21ல் பாடசாலை தெருவில் உள்ள ஜெயம் மஹால், மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-30ல் கொளத்தூர், கல்பாளையம் லட்சுமிபுரம், பெரம்பூர் ரெட்ஹில்ஸ் நெடுஞ்சாலையில் உள்ள ஶ்ரீசெல்வலட்சுமி திருமண மண்டபம், தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-39ல் புதுவண்ணாரப்பேட்டை, செரியன் நகரில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி மைதானம், திரு.வி.க.நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-71ல் பெரம்பூர், பள்ளி சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-88ல் பாடி, டி.வி.எஸ். நகர் 2வது தெருவில் உள்ள அன்னை மண்டபம், அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-108ல் சேத்துப்பட்டு, மேயர் ராமநாதன் சாலையில் உள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடல், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-118ல் இராயப்பேட்டை, ஶ்ரீநிவாச பெருமாள் சன்னதி தெருவில் உள்ள மாநகராட்சி சமுதாயக் கூடம், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11), வார்டு-146ல் மதுரவாயல், பி.எச். சாலையில் உள்ள சீதாலட்சுமி திருமண மண்டபம், ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்-12), வார்டு-159ல் மீனம்பாக்கம், காமராஜர் சாலையில் உள்ள ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி, சோழிங்கநல்லூர் மண்டலம் (மண்டலம்-15), வார்டு-195ல் துரைப்பாக்கம், ஏலீம் மெட்ரிகுலேசன் பள்ளி ஆகிய 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து