முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உதயநிதி ஸ்டாலின் நிச்சயம் முதலமைச்சர் ஆவார் : அமைச்சர் ரகுபதி நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 24 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Ragupathy 2024-12-21

Source: provided

புதுக்கோட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து தமிழ்நாடு முதல்-அமைச்சராக இன்றைய துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக வருவார். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று அமைச்சர் ரகுபதி தெரவித்துள்ளார்.

நெல்லையில் நடைபெற்ற பா.ஜ.க. பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்ற மத்திய மந்திரி அமித்ஷா, வருகிற தேர்தலில் தி.மு.க. அரசை வேரோடு அகற்றுவோம் என பேசியிருந்தார். இதுகுறித்து புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கடந்த காலங்களில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை, அதனால் அவர் முதல்-அமைச்சர் ஆக முடியாது என்றனர். அதனை தவிடுபொடியாக்கி முதல்-அமைச்சரானவர் மு.க.ஸ்டாலின். அதேபோல மு.க.ஸ்டாலினை தொடர்ந்து தமிழ்நாடு முதல்-அமைச்சராக இன்றைய துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக வருவார். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

தி.மு.க.வின் வேரை அசைத்துக்கூட பார்க்க முடியாது. அந்த வேர் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது. தி.மு.க.வின் வேர் ஆழமாக பாய்ந்திருக்கிறது. எனவே தி.மு.க.வின் வேரை அமித்ஷாவால் கண்டுபிடிக்க கூட முடியாது. பிரதமர், முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள் யாரும் 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி பறிக்கப்படும் என சட்டம் கொண்டு வருவது நிறைவேறாது. அப்படி நிறைவேறினாலும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து முறியடித்து காண்பிக்கப்படும்.

வாக்கு சதவீத அடிப்படையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற அமித்ஷாவின் கணக்கிற்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது. தமிழகத்தின் நிலவரம் அமித்ஷாவுக்கு தெரியவே தெரியாது. அகில இந்திய நிலவரம் வேறு, தமிழகத்தின் நிலவரம் வேறு என்பதை நிரூபிக்கும் வகையில், 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் பாடம் புகட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து