முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய்க்கு எதிராக தி.மு.க.வினர் ஒட்டிய போஸ்டர்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Vijay-2025-07-04

Source: provided

மதுரை : மதுரை நகர் பகுதிகள் மற்றும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பாரபத்தியில் த.வெ.க.வின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21-ந்தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. சுமார் 5 லட்சத்திற்கும் மேல் திரண்ட தொண்டர்கள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். மோடி தலைமையிலான மத்திய அரசையும், 'அங்கிள்' என்று கூறி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

அதேபோல் அ.தி.மு.க. நிலைப்பாடு பற்றியும், அக்கட்சி தொண்டர்கள் தொடர்பாகவும் கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அவரது இந்த பேச்சுக்கு தி.மு.க., அ.தி.மு.க. தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். த.வெ.க. மாநாட்டில் விஜய்யின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

விஜய்க்கு எதிராக பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மதுரை நகர் பகுதிகள் மற்றும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் ஆங்கிலத்தில் வாட் புரோ, ஓவர் புரோ, அடக்கி வாசிங்க புரோ என்ற வசனங்கள் உள்ளவாறு மதுரை முழுவதும் காணப்படுகிறது.

விஜய் பேச்சுக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் தி.மு.க.வினர் தொடர்ச்சியாக ஒட்டப்பட்டு வரும் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து