முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி ஒரு நல்ல முயற்சி: நயினார் வரவேற்பு

வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2025      தமிழகம்
Nayanar-Nagendran 2023-11-1

ஈரோடு, அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும்  செங்கோட்டையனின் முயற்சி ஒரு நல்ல முயற்சி என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு கருத்துகளை வெளியிட்டார். அதன்படி, “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எனக்கு 2 வாய்ப்புகள் கிடைத்தன. அ.தி.மு.க. உடைந்துவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளேன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராக பரிந்துரைத்தவர் சசிகலா.

ஆட்சி மாற்றத்திற்கு அ.தி.மு.க.வில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். தொண்டர்களின் உணர்வுகளை புரிந்தே இந்த கோரிக்கையை வலியுறுத்தி உள்ளோம். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம். வெளியே சென்றவர்களை அரவணைத்தால்தான் நம்மால் வெல்ல முடியும் என்பது எம்.ஜி.ஆர் சொல்லிக்கொடுத்த பாடம்” என்று கூறினார்.

இந்த நிலையில், இதுகுறித்து பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:- “அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி. அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக்கு தேவைப்பட்டால் நாங்கள் பேசவும் தயாராக உள்ளோம். அனைவரும் ஓரணியில் இணைவது நிச்சயம் நடக்கும். கடைசி ஒரு மாதத்தில் கூட நடக்கும். அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. எல்லாரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை நிச்சயம் அகற்றலாம்” என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து