முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் கோவிலில் மீண்டும் தங்கத்தேர் பவனி: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2025      ஆன்மிகம்
Tiruchendur-temple-2025-09-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தங்கத்தேர் பவனி தொடங்க முடிவு செய்யப்பட்டது. தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்கத்தேர் பவனியை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினந்தோறும் மாலை 6 மணியளவில் கிரி பிரகாரத்தில் தங்கத்தேர் பவனி நடைபெறுவது வழக்கம். ஆனால், திருச்செந்தூர் கோவில் பெருந்திட்ட வளாக பணிகளின் ஒரு பகுதியாக கோவில் கிரிபிரகாரத்தில் தரைத்தள மேம்பாட்டு பணிகள் நடைபெற்றதால் கடந்த 17.7.2024 முதல் தற்காலிகமாக தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

தற்போது இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், நேற்று முன்தினம் முதல் மீண்டும் தங்கத்தேர் பவனி தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி நேற்று மாலை சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளினார். பின்னர் சுவாமி அம்பாள்களுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்கத்தேர் பவனியை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தங்கத்தேரை இழுத்தனர். தங்கத்தேர் கிரிபிரகாரத்தில் பவனி வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் பழனி, கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரி சங்கர், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து