முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை

வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2025      உலகம்
Joe-Biden 2023 04 11

வாஷிங்டன், ஜோ பைடனுக்கு தோல் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவரது அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன்(வயது 82). கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம், அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் ஜோ பைடன் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியானது.

ஆனால் வயோதிகம் உள்ளிட்ட காரணங்களால் அவரை அதிபர் வேட்பாளராக களமிறக்க அவரது சொந்த கட்சியான ஜனநாயக கட்சியில் இருந்தே எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகினார். அவருக்கு பதில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

இதனிடையே, கடந்த மார்ச் மாதம் ஜோ பைடனுக்கு தீவிர புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது எலும்புகள் வரை புற்றுநோய் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. அந்த சமயத்தில் ஜோ பைடன் தனது சமூக வலைதள பக்கத்தில், “புற்றுநோய் அனைவரையும் தொட்டுவிடுகிறது. உங்களில் பலரைப் போல், என் மனைவி ஜில் பைடனும், நானும் கடினமான நேரத்தில் உறுதியாக இருக்க கற்றுக்கொண்டோம்” என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், ஜோ பைடனுக்கு தோல் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவரது அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஜோ பைடனின் நெற்றியில் தோல் புற்றுநோய் செல்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து