எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
துணை முதல்வர் .உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் துணை முதல்வர், முதல்வர் அவர்களின் சிறப்புத் திட்டங்களான மகளிர் விடியல் பயணத்திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண், தமிழ்புதல்வன், முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், கலைஞர் கனவு இல்லம், மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம், உங்களுடன் ஸ்டாலின் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம், குடிநீர் திட்டப் பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 97,741 நபர்களுக்கு 153.43 கோடி ரூபாய் செலவில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 3,193 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட பணியாணைகள் வழங்கப்பட்டு, இதுவரை 996 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது:-
நம்முடைய முதல்வர் தலைமையிலான நம்முடைய திராவிட மாடல் அரசு இன்றைக்கு அனைத்து தரப்பு மக்களையும் மனதில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த திட்டங்களுடைய பயன் ஒவ்வொரு இல்லங்களுக்கும் சென்று சேர்ந்து மக்கள் பொருளாதார சமூக முன்னேற்றங்களை தொடர்ந்து அடைந்து வருகின்றார்கள்.
இந்த திட்டங்களில் விடுபட்டவர்களை கண்டறிந்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உங்களுடன் ஸ்டாலின் என்ற மக்களைத் தேடி மனுக்களைப் பெற்று, அதற்கான தீர்வு காணுகின்ற திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து செயல்படுத்தி வருகின்றார். இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முகாம்களில் மனுக்களை அளித்த மக்களுக்கு விரைந்து தீர்வுகளை வழங்க வேண்டும். இந்த முகாம் குறித்த விழிப்புணர்வை அனைத்து மக்களுக்கும் ஏற்படுத்தி, மக்களை இந்த முகாம்களுக்கு வரவழைக்க வேண்டியது நம்முடைய கடமை. அதேபோல் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களை நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களில் குறித்த காலத்திற்குள் நடத்த அனைத்து முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை கேட்டுக் கொள்கின்றேன்.
முதல்வர் எத்தனையோ திட்டங்களை தீட்டினாலும், நீங்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டால் தான், அந்த திட்டங்கள் மக்களை சென்றடையும். அரசு அலுவலர்களாகிய நீங்கள் அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து செயல்பட்டு, அரசுக்கும், முதல்வர் அவர்களுக்கும் நல்ல பெயரை மக்களிடத்திலே பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டு, அத்தனைபேருக்கும் மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்து, விடைபெறுகின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தி.மலையில் வரும் 14-ம் தேதி தி.மு.க. இளைஞரணி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
09 Dec 2025சென்னை, திருவண்ணாமலையில் வரும் 14-ம் தேதி தி.மு.க. இளைஞரணி மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
-
நீலகிரியில் குந்தா, பந்தலூர் 2 புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கம்
09 Dec 2025சென்னை, உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து, குந்தா மற்றும் பந்தலூர் என 2 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கப்பட்டுள்ளன.
-
வருகிற ஜனவரி 15-ம் தேதிக்குள் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்: அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு
09 Dec 2025புதுடெல்லி, வருகிற ஜனவரி 15-ம் தேதிக்குள் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியா - அமெரிக்கா இடையே இன்று வா்த்தக பேச்சுவாா்த்தை
09 Dec 2025டெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையே இன்று வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது.
-
புதின் இந்தியா வருகை எதிரொலி: இந்திய விவசாய பொருட்கள் மீது வரி விதிக்க அதிபர் ட்ரம்ப் திட்டம்
09 Dec 2025வாஷிங்டன், இந்திய விவசாய பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
-
கூட்டணி குறித்து முடிவெடுக்க இ.பி.எஸ்.சுக்கு அதிகாரம்: அ.தி.மு.க. பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
10 Dec 2025சென்னை, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கே இருப்பதாக அ.தி.மு.க.
-
தமிழகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை மீண்டும் ஒப்படைக்க இன்றே கடைசி நாள்
10 Dec 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை ஒப்படைக்க இன்றே கடைசி நாளாகும்.
-
யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் தீபாவளி: பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு
10 Dec 2025புதுடெல்லி, யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் தீபாவளி சேர்க்கப்பட்டதைப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
-
9-வது நாளாக தொடர்ந்த சிக்கல்: 14 இண்டிகோ விமானங்கள் ரத்து
10 Dec 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 14 இண்டிகோ விமான சேவைகள் நேற்றும் (டிச. 10) ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்தது.
-
தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி
10 Dec 2025சென்னை, காங்கிரஸ் கட்சியின் கிராம கமிட்டி மாநில மாநாட்டில் ராகுல் காந்தி பங்கேற்க அடுத்த மாதம் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்வு: புதிய உச்சம் தொட்ட வெள்ளி விலை
10 Dec 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.96,240-க்கு விற்பனையானது.
-
மீண்டும் இ-மெயில் மூலம் ராஜஸ்தானில் அஜ்மீர் தர்கா, கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
10 Dec 2025ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் உள்ள பிரபல அஜ்மீர் தர்கா, கலெக்டர் அலுவலகம் மற்றும் ராஜஸ்தான் ஐகோர்ட்டின் ஜெய்ப்பூர் கிளை ஆகியவற்றிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்
-
தமிழகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை மீண்டும் ஒப்படைக்க இன்றே கடைசி நாள்
10 Dec 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை ஒப்படைக்க இன்றே கடைசி நாளாகும்.
-
தமிழகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை மீண்டும் ஒப்படைக்க இன்றே கடைசி நாள்
10 Dec 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை ஒப்படைக்க இன்றே கடைசி நாளாகும்.



