முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் 3 நாட்கள் நிறுத்தம்

புதன்கிழமை, 24 செப்டம்பர் 2025      ஆன்மிகம்
Tirupati 2023-09-30

Source: provided

திருப்பதி : திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் 3 நாட்களுக்கு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், புரட்டாசி மாதத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் அதிக அளவில் குவிவது வழக்கம். திருப்பதியில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் ஒவ்வொரு மாதமும் 24 அல்லது 25 ஆகிய தேதிகளில் தொடங்கி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இந்த நாளில் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியாதவர்கள் ரூ.300 சிறப்பு தரிசன வரிசையில் சென்று, சிரமம் இல்லாமல் சாமி தரிசனம் செய்வதற்கு மற்றொரு வழியும் உள்ளது. இந்த டிக்கெட்டுகள் ஆப்லைனில் தினசரி வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, திருப்பதி அலிபெரி நடைபாதை துவங்கும் இடத்தில் உள்ள கோவிலில் தினமும் ஸ்ரீநிவாச திவ்ய அனுகிரக ஹோமம் நடைபெறும். இதில், கலந்து கொள்பவர்களுக்கு திருப்பதி ரூ.300 சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், திருப்பதியில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் 3 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நிர்வாக காரணங்களுக்காக, டிசம்பர் 29, 30, 31 ஆகிய 3 தேதிகளில் ரூ.300 தரிசன டிக்கெட் வெளியீடு நிறுத்தி வைக்கப்படுகிறது. எனினும், பக்தர்களின் வசதிக்காக சிறப்பு தரிசன டிக்கெட் பற்றிய மறு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என திருப்பதி கோவில் தேவஸ்தானம் போர்டு அறிவித்து உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து