முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இருமல் மருந்தால் குழந்தைகள் பலி: மாநில சுகாதார செயலாளர்களுடன் மத்திய அரசு அவசர ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 5 அக்டோபர் 2025      இந்தியா
Medisan 2025-10-04

Source: provided

புதுடெல்லி : இருமல் மருந்தால் குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில செயலாளர்களுடன் மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அவசர ஆலோசனை நடத்தியது.

ஆபத்தான ரசாயனம் கலந்த இருமல் மருந்தை உட்கொண்டதால் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் குழந்தைகள் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இருமல் மருந்தால் குழந்தைகள் இறந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அவசர ஆலோசனை நடத்தியது. நேற்று மாலை மத்திய சுகாதார அமைச்சகம் இந்த அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயலாளர்கள், சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் மருந்து கட்டுப்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். காணொலி வாயிலாக இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த அவசர கூட்டத்தில் இருமல் மருந்துகளின் பகுத்தறிவு பயன்பாடு மற்றும் மருந்துகளின் தரம் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து