முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 12-ம் தேதி முதல் மதுரையில் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்

புதன்கிழமை, 8 அக்டோபர் 2025      தமிழகம்
Nayanar-Nagendran 2023-11-1

Source: provided

மதுரை : மதுரையில் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதா, சட்டமன்ற தேர்தலை சந்திக்க தீவிரம் காட்டி வருகிறது. இதையொட்டி, கட்சி நிர்வாகிகளுடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் ‘தமிழகம் தலை நிமிர’ என்ற முழக்கத்துடன் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்.

வருகிற 12-ந்தேதி மதுரையில் இருந்து தனது பயணத்தை தொடங்க இருக்கிறார். இதை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைக்கிறார். மதுரையை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் சிவகங்கை, செங்கல்பட்டு, சென்னை வடக்கு, மத்திய சென்னை, பெரம்பலூர் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்திக்கிறார். 

இந்த நிலையில், மதுரையில் சுற்றுப்பயண தொடக்க விழாவுக்கு அனுமதிகோரி, மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பா.ஜனதா சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி மனு அளித்தார். அந்த மனுவில், கோ.புதூர் பஸ் நிலையம், பழங்காநத்தம், சிம்மக்கல், அண்ணா நகர் அம்பிகா திரையரங்கம் சந்திப்பு உள்ளிட்ட 5 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் அனுமதி தருமாறு கேட்டு இருந்தார். இதையடுத்து அண்ணா நகர் அம்பிகா திரையரங்கு சந்திப்பில் பிரசாரம் பயண தொடக்க விழாவை நடத்த மாநகர் போலீசார் அனுமதி அளித்தனர். மேலும், பிரசார பயணத்திற்கு வரும் மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும், கர்ப்பிணிகள், குழந்தைகள் பங்கேற்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகளை பா.ஜனதாவுக்கு விதித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து