முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருங்காட்சியகமாக மாறும் ரவீந்திரநாத் தாகூர் வீடு

புதன்கிழமை, 8 அக்டோபர் 2025      இந்தியா
Odisha 2025-10-08

Source: provided

புவனேஷ்வர் : ரவீந்திரநாத் தாகூர் வாழ்ந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்ற ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது.

இந்திய தேசிய கீதமான ’ஜன கண மன அதிநாயக பாடலை பாடியவர் ரவீந்திரநாத் தாகூர். வங்க மொழி கவிஞரான ரவீந்திரநாத் தாக்கூர் கொல்கத்தாவில் பிறந்தார். இவருக்கு ஆங்கிலேயே ஆட்சிகாலத்தில் ஒடிசாவின் புரி கடற்கரை அருகே நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் வீடு கட்டி ரவீந்திரநாத் தாகூர் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் காலமான பின்னர் அந்த வீட்டை கல்விக்காக பயன்படுத்த ரவீந்திரநாத் குடும்பத்தினர் ஒடிசா அரசுக்கு கொடுத்தனர். அந்த வீடு கல்லூரி விடுதியாக செயல்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் அந்த வீட்டில் தங்கி கல்வி பயின்று வந்தனர். அதன்பின் அந்த வீடு கைவிடப்பட்ட நிலையில் 2019ம் ஆண்டு புரியை தாக்கிய புயலில் வீடு கடுமையாக சேதமடைந்தது.

இந்நிலையில், ரவீந்திரநாத் தாகூர் வாழ்ந்த வீட்டை புதுப்பித்து அருங்காட்சியகமாக மாற்ற ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஒடிசா கலாசாரத்துறை மந்திரி சூர்யவன்ஷி சுராஜ் கூறுகையில், புரியில் உள்ள குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் வீட்டை புதுப்பித்து அதை அவரது நினைவு அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்துள்ளோம்’ என்றார். அருங்காட்சியகமாக மாற்றும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறுனார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து