எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : ஜி.டி.நாயுடு புதிய மேம்பாலம் பகுதியில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவையில் தொடங்கப்பட்டுள்ள பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில் அதனை சீரமைக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, கோவையில் பாலம் அமைந்துள்ள இடத்தில் நீண்ட நாட்களாக பாலம் திறக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து 10.10 கிலோமீட்டர் நீளத்திற்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.
தென்னகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் உள்ள தொழில் அதிபர்களின் கோரிக்கையை தொடர்ந்து அந்த ஊரை சேர்ந்த விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் பெயர் அந்த பாலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. அங்கு உப்பிலிபாளையம் பகுதியில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், அங்குள்ள ரவுண்டானா பகுதியில் சாலை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அங்கு விபத்துகள் ஏற்படாமல் இருக்க கோரிக்கை வருகிறது.
அதே போல பாலம் கட்டப்பட்ட பிறகு விமானநிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படலாம் என்று கூறியதால் அங்கு ரப்பர் வேக தடை அமைக்கப்பட உள்ளதோடு, சிக்னல் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025