Idhayam Matrimony

தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கவே வாய்ப்பு : ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

திங்கட்கிழமை, 27 அக்டோபர் 2025      தமிழகம்
Ops 2024-12-13

Source: provided

சிவகங்கை : தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைக்க வாய்ப்புள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மருது சகோதரர்களின் 224-ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்ட 6.5 கிலோ எடையுள்ள வெள்ளி கவசத்தினை வழங்கினார். அதன்பின்னர் அங்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

கேள்வி: வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி?

பதில்: தமிழக மக்கள் நலன் கருதி நல்ல முடிவை எடுக்க உள்ளோம். அதை முதலில் உங்களிடம் சொல்லிவிட்டு தான் மற்றவர்களிடம் சொல்வோம். விஜய் கட்சி ஆரம்பித்த உடனேயே சொல்லிவிட்டேன். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். கரூர் துயர சம்பவம் நடந்து விட்டது. அங்கு சென்று அனுதாபம் தெரிவித்தால் என்ன இங்கு அழைத்து வந்து அனுதாபம் தெரிவித்தால் என்ன. அனுதாபம் தெரிவித்துவிட்டார். அதை பாராட்ட வேண்டுமே தவிர , காரணங்களை பற்றி பேசுவது சரியாக இருக்காது. உண்மையிலேயே இது பாராட்ட கூடியது.

கேள்வி: 2026-ல் எந்த கட்சி ஆட்சிக்கு வரும்?

பதில்: இன்றைய சூழ்நிலையில் எல்லாக் கட்சிகளும் பிரிந்து கிடக்கின்றன. அதி.மு.க. பிரிந்து கிடக்கிறது; பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாசுக்கும், அன்புமணிக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்க தி.மு.க.வுக்கு தானே வாய்ப்பிருக்கிறது. அது கண்கூடாகவே தெரிகிறது. ஆதலால் தி.மு.க.வே மீண்டும் ஆட்சி அமைக்கும் என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்; நான் பேசவில்லை. என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து