முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் ஒற்றுமைக்காக - தமிழகத்தின் வளர்ச்சிக்காக தி.மு.க.வும்-காங்கிரசும் இன்று ஒரே அணியில் பயணிக்கிறது: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திங்கட்கிழமை, 27 அக்டோபர் 2025      தமிழகம்
CM-1-2025-10-27

சென்னை, தி.மு.க.வும் காங்கிரஸ் பேரியக்கமும் கடந்த காலங்களில் வெவ்வேறு பாதைகளில் பயணித்திருந்தாலும், இன்று நாட்டின் நன்மைக்காக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, இந்தியாவின் ஒற்றுமைக்காக ஒரே சிந்தனையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் ஸ்ரீராஜா சொக்கர் இல்லத் திருமணம் விழாவில் நேற்று காலை முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். திருமணத்தை நடத்திவைத்த பிறகு மணமக்களை வாழ்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது முதல்வர் பேசியதாவது: தி.மு.க. ஆட்சியில்தான் சுயமரியாதை திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் எப்படி பேச வேண்டும் என்று எனக்கு பாடம் எடுத்தவர் சொக்கர்.

தி.மு.க.வும் காங்கிரஸ் பேரியக்கமும் கடந்த காலங்களில் வெவ்வேறு பாதைகளில் பயணித்திருந்தாலும், இன்று நாட்டின் நன்மைக்காக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, இந்தியாவின் ஒற்றுமைக்காக ஒரே சிந்தனையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். காங்கிரஸின் இளம் தலைவராக விளங்கிக் கொண்டிருக்கும் சகோதரர் ராகுல் காந்தி, தனிப்பட்ட முறையில் என்மேல் காட்டக் கூடிய அன்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ராகுல் காந்தியை சகோதரர் என்று அழைப்பதற்கு காரணம் அவர் என்னை அண்ணன் என்று அழைப்பதுதான். அவருக்கு நான் மூத்த அண்ணன்.

அரசியலமைப்பு மட்டுமின்றி கொள்கை உறவாகவும் வலுப்பெற்று இருக்கிறோம். இந்தியாவின் குரலாக இருக்கக் கூடிய புரிதலும் கொள்கை உறவு நிச்சயமாக நாட்டின் எதிர்காலத்தை காக்கும் என்பது உறுதி.” எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து