முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ம் கட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் வரும் நவ. 4-ல் தொடக்கம்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

திங்கட்கிழமை, 27 அக்டோபர் 2025      இந்தியா
Election-Commision 2023-04-20

புதுடெல்லி, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வரும் நவம்பர் 4-ம் தேதி மேற்கொள்ளப்படும் என தலைமைத் தோ்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ம் தேதி வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 4-ம் தேதி முதல் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கும் என்றும், வரைவுப் பட்டியல் டிசம்பர் 9-ம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7-ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். 

பீகாரைத் தொடா்ந்து நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடா்பாக அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுடன் தோ்தல் ஆணையம் ஏற்கெனவே இரு உயா்நிலைக் கூட்டங்களை நடத்தியது. இதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர் சந்திப்பில் ஞானேஷ் குமார் பேசியதாவது,

பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. தற்போது இரண்டாம் கட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய மாநிலங்கள் குறித்து அறிவிக்கப்படவுள்ளது. 36 மாநிலங்களில் உள்ள தேர்தல் அலுவலர்களுடன் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டது. 

இதன்படி, இரண்டாம் கட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன. அந்தமான், கோவா, லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் சத்தீஸ்கர், குஜராத், கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 51 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். புதுச்சேரியில் 10.21 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். நவம்பர் 4-ம் தேதி முதல் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கும். வரைவுப் பட்டியல் டிசம்பர் 9-ம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிடப்படும். 

அஸ்ஸாமில் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கான தேதி தனியாக அறிவிக்கப்படும். அனைத்துத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்து சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து விளக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டார்.

2-ம் கட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம்: 

1) 12 மாநிலங்கள் - 3 யூனியன் பிரதேசங்கள்.

2) மொத்தம் வாக்காளர்கள் 51 கோடி பேர்.

3) கணக்கெடுப்புப் பணிகள் நவ. 4-ல் துவக்கம்.

4) வரைவுப் பட்டியல் - டிச. 9-ல் வெளியீடு

5) இறுதி வாக்காளர் பட்டியல் -பிப்.7-ல் வெளியீடு

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து