முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டம் என்பது வெறும் காகிதமல்ல; மாணவர்களின் உழைப்புக்கு கிடைக்கும் ஒரே அங்கீகாரம் : * பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திங்கட்கிழமை, 27 அக்டோபர் 2025      தமிழகம்
CM 2024-12-02 (2)

Source: provided

சென்னை : பட்டம் என்பது வெறும் காகிதமல்ல; மாணவர்களின் உழைப்புக்கு கிடைக்கும் ஒரே அங்கீகாரம் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், உலகம் எந்த வேகத்தில் மாற்றம் அடைகிறதோ, அந்த வேகத்திற்கு நாமும் ஈடுகொடுத்து ஓட வேண்டும் என்றும் அவர் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பட்டமளிப்பு விழா....

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக். 27) சென்னை, மியூசிக் அகாதெமியில் நடைபெற்ற திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி, உரையாற்றினார். அதில் அவர் தெரிவித்ததாவது: ”உங்கள் கையில் இருக்கும் ‘பட்டம்’ என்பது வெறும் பேப்பர் இல்லை. உங்களுடைய உழைப்பின் விளைச்சல். உங்கள் அறிவுக்கான - திறமைக்கான அங்கீகாரம். இந்த நாள் உங்கள் குடும்பத்தின் பல தலைமுறை கண்ட கனவு, மெய்ப்படக்கூடிய நாளாக அமைந்திருக்கிறது. மதிப்புமிக்க பாரதிதாசன் கல்வி நிறுவனத்திலிருந்து நீங்கள் டிகிரி பெற்று இருக்கிறீர்கள். 

உயர்ந்த இடத்திற்கு... 

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்கீழ் மேலாண்மை பள்ளியாக ‘பெல்’ வளாகத்தில் நிறுவப்பட்ட பாரதிதாசன் மேலாண்மை நிறுவனம் இன்றைக்கு உலகப் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்கி வருகிறது. மேனேஜ்மெண்ட் சார்ந்த கல்வித்துறையில், இந்திய அளவில், தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறது. இங்கு படித்த உங்களுடைய சீனியர்ஸ் எல்லாம், இப்போது, பல தொழில் நிறுவனங்களில், கல்வி மற்றும் சமூக துறைகளில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். அந்த பட்டியலில் உங்கள் பெயரும் இடம்பெற வேண்டும். ஏன் நீங்கள் உருவாக்குகின்ற நிறுவனம் அந்த உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும்.

சமநிலை மிக அவசியம்...

உலகம் எந்த வேகத்தில் மாற்றம் அடைகிறதோ, அந்த வேகத்திற்கு நாமும் ஈடுகொடுத்து ஓட வேண்டும். கொஞ்சம் அசந்தாலும், பின்தங்கிவிட்டீற்கள் என்று சொல்லிவிடுவார்கள்.  அதேபோல், தலைமைதுவம் என்றால், ஒருவர் வகிக்கக்கூடிய  பதவியோ, அவர்கள் சம்பளமோ கிடையாது. அவர்கள் உருவாக்கும் நேர்மறை தாக்கம்தான்.  இந்த ஏ.ஐ. காலத்தில், உங்களின் நேர்மைதான் உங்கள் அறிவை அளவிட உதவும். வெற்றிக்கும் ஒழுக்கத்திற்கும் இடையே சமநிலை மிகவும் அவசியம். எத்தனை மாற்றங்கள், வளர்ச்சிகள் வந்தாலும், சில பேசிஸ் எப்போதும் மாறாது. அதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். 

நிலைத்து நிற்க முடியும்...

இதற்காக பெரிய பெரிய புத்தகத்தையெல்லாம் படிக்க வேண்டும் என்று இல்லை. எல்லாவற்றிற்கும் பொருந்தும் அடிப்படையான மேனேஜ்மெண்ட் பாடங்கள் நம்முடைய திருக்குறளிலேயே நிறைய இருக்கிறது.  எடுத்துக்காட்டுக்கு சொல்ல வேண்டும் என்றால், அடுத்து நடக்கப் போவதை கணிக்கிறவர்கள்தான் எந்த துறையிலும் நிலைத்து நிற்க முடியும். அதைத்தான் “அறிவுடையார் ஆவது அறிவார்” என்று வள்ளுவர் சொல்கிறார். அந்த திறன் இல்லாதவர்கள் எதிர்பாராத ஒரு இடைஞ்சலுக்கே நம்பிக்கை இழந்து முடங்கிவிடுவார்கள். 

சரியான திட்டமிடல்... 

சாதக பாதகங்களை யோசிக்காமல், சரியான திட்டமிடல் இல்லாமல், எதிலும் இறங்க கூடாது என்பதை, “எண்ணித் துணிக கருமம்” என்று சொல்லி, வள்ளுவர் ‘வார்னிங் கொடுக்கிறார். எவ்வளவு நல்ல யோசனையாக இருந்தாலும், ‘நேரம்’ மிகவும் முக்கியம். அதைத்தான் “காலம் அறிந்து கடிது செயல்வேண்டும்” என்று சொல்கிறார். அப்படி செயல்பட்டால் உலகத்தையே கூட வெல்லலாம். சரியான ஆள்களை வைத்தால்தான், எந்த வேலையும் சரியாக நடக்கும் என்பதை, “இதனை இதனால் இவன்முடிக்கும்” என்ற குறளில் சொல்கிறார். இது எல்லாவற்றிற்கும் மேல், நாம் செய்யும் எந்த செயலிலும் அறம், வாய்மையை தவறவிடக் கூடாது என்று மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகிறார்” என்று பேசினார்.

தலைமைதுவம் என்றால், ஒருவர் வகிக்கக்கூடிய  பதவியோ, அவர்கள் சம்பளமோ கிடையாது. அவர்கள் உருவாக்கும் நேர்மறை தாக்கம்தான்.  இந்த ஏ.ஐ. காலத்தில், மாணவர்களின் நேர்மைதான் அறிவை அளவிட உதவும். வெற்றிக்கும் ஒழுக்கத்திற்கும் இடையே சமநிலை மிகவும் அவசியம். அதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். 

- முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து