எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
							
						Source: provided
பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா அளித்த விளக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: “ஷ்ரேயாஸ் மிகமிக நன்றாக இருக்கிறார். மருத்துவர் எதிர்பார்த்ததைவிட அவர் மிக வேகமாக குணமடைந்து வருகிறார். அவர் முழுமையாக குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிக விரைவாக குணமடைந்து ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் தனது வழக்கமான பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். அவரது காயம் மிகவும் ஆபத்தானது, ஆனால் அதிலிருந்து அவர் மீண்டுவிட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு நேற்று மாற்றப்பட்டார்.
ஷ்ரேயாஸ் ஐயருக்கு அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை. ஆனால், மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்காரணமாக அவரின் உடல்நிலை மருத்துவர்கள் எதிர்பார்த்ததைவிட விரைவாக முன்னேற்றம் அடைந்துள்ளது. அவர் அனைவருடனும் நன்றாக பேசி, சிரித்துக் கொண்டுள்ளார். ஏற்கெனவே செவிலியர்களுடன் நகைச்சுவை செய்யத் தொடங்கிவிட்டார்” எனத் தெரிவித்தார்.
__________________________________________________________________________________________
இந்திய வீராங்கனை அபாரம்
கனடா மகளிர் ஓபன் ஸ்குவாஷ் தொடர் டொராண்டோவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியாவின் 17 வயதான அனாஹெத் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடரின் காலிறுதி போட்டியில் இந்தியாவின் அனாஹெத், மற்றும் நடப்பு சாம்பியனான பெல்ஜியத்தின் டின்னே கில்லிஸ் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் அனாஹெத் 12-10, 11-9, 11-9 என்ற நேர் செட்களில் கில்லிஸை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் 43-வது இடத்தில் உள்ள வீராங்கனை அனாஹெத் 7-வது இடத்தில் உள்ள வீராங்கனையை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி வரலாறு படைத்துள்ளார். இது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியாகும். மேலும் முதல் 10 வீராங்கனைக்கு எதிரான முதல் வெற்றியாகும். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் 20-ம் நிலை வீராங்கனை பிரான்சின் மெலிசா ஆல்வ்ஸையும் இவர் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
______________________________________________________________________________________
தென் ஆப்பிரிக்கா வெற்றி
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதனையடுத்து பாகிஸ்தான்- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடி ரீசா ஹென்ரிக்ஸ் 60 ரன்கள் எடுத்தார். ஜார்ஜ் லிண்டே 36 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 195 ரன்கள் இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீசை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.இதனால் பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்கா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
_____________________________________________________________________________________________
மெஸ்சியின் புதிய விருப்பம்
48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி விளையாடுவாரா? அல்லது உடல்தகுதியை காரணம் காட்டி ஒதுங்கி விடுவாரா? என தொடர்ச்சியாக எழுந்த கேள்விகளுக்கு அவரே தற்போது விடை அளித்துள்ளார். 38 வயதான மெஸ்சி அளித்த ஒரு பேட்டியில்,
‘உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுவது மகத்தானது. நானும் அதில் பங்கெடுக்கவே விரும்புகிறேன். நான் நல்ல உடல்தகுதியுடன் தேசிய அணிக்கு எனது பங்களிப்பை அளிப்பது முக்கியமானதாகும். நான் 100 சதவீதம் உடல் தகுதியுடன் இருக்கிறேனா என்பதை பார்க்க வேண்டும். என்னால் பங்களிக்க முடியும் என்று நினைத்தால், அதன் பிறகு உலகக் கோப்பையில் ஆடுவது குறித்து முடிவு செய்வேன். உண்மையில் நான் உலகக் கோப்பையில் ஆட ஆவலாக இருக்கிறேன். இந்த முறை நாங்கள் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் இறங்கப்போகிறோம். அதனை தக்கவைக்க முடிந்தால், அற்புதமாக இருக்கும்’ என்றார்.
_______________________________________________________________________________________
சூர்யகுமார் தாயார் பிராத்தனை
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. அதில் அவரது இடது கீழ் விலாஎலும்பு பகுதியில் காயமடைந்திருப்பதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஷ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சீக்கிரம் நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சத் பூஜையின் போது ஷ்ரேயாஸ் ஐயர் குணமடைய இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமாரின் தாயார் பிரார்த்தனை செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
| கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்  1 year 1 month ago | வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்  1 year 1 month ago | மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.  1 year 2 months ago | 
-   
          வாக்குகளுக்காக பீகாரை சுரண்டுகிறார்கள்: தே.ஜ.க. கூட்டணி மீது தேஜஸ்வி தாக்கு30 Oct 2025பாட்னா, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தொழில்களை எல்லாம் குஜராத்தில் அமைத்துவிட்டு, பீகார் மாநிலத்தை வாக்குகளுக்காக சுரண்டி வருகிறது என ஆர்.ஜே.டி. 
-   
          63-வது குருபூஜை - 118-வது ஜெயந்தி விழா: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை30 Oct 2025மதுரை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (30.10.2025) ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு 
-   
          தேசியத் தலைவர்கள் விழாவை எல்லா சமூகத்தினரும் கொண்டாட வேண்டும்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்30 Oct 2025ராமநாதபுரம், வருகின்ற காலத்திலாவது எல்லா தேசியத் தலைவர்களுடைய விழாவையும் எல்லா சமூகத்தினரும் கொண்டாடுகின்ற விழாவாக மாற்ற வேண்டும் என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியா 
-   
          பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகுகிறது கேரள அரசு30 Oct 2025திருவனந்தபுரம், பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலக கேரள அரசு முடிவு செய்துள்ளது. 
-   
          கேரளாவில் திருமண விழாவில் ருசிகரம்: ‘கியூ ஆர்’ கோடு மூலம் ‘மொய்’ வசூல்30 Oct 2025எர்ணாகுளம், கேரளாவில் நடந்த திருமண விழாவில் ‘கியூ ஆர்’ கோடு மூலம் ‘மொய்’ வசூலிக்கப்பட்டது. 
-   
          ஐ.பி.எல். கொல்கத்தா அணியின் புதிய பயிற்சியாளரானார் அபிஷேக்30 Oct 2025கொல்கத்தா, ஐ.பி.எல். டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். 
-   
          ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து30 Oct 2025புதுடெல்லி, ஜப்பான் பெண் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். 
-   
          மதுரையில் தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மரியாதை30 Oct 2025மதுரை, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
-   
          இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-10-2025.30 Oct 2025
-   
          சென்னையில் நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் அபராதம்30 Oct 2025சென்னை, சென்னையில் நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் இனி ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது. 
-   
          டெஸ்ட் வரலாற்றில் முதல் முறை: உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை: இந்தியா - தெ.ஆப்பிரிக்க போட்டியில் அறிமுகம்30 Oct 2025மும்பை, டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை நடைமுறைக்கு வருகிறது. 
-   
          பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க பரிந்துரை செய்வோம்: நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி30 Oct 2025மதுரை, பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க பரிந்துரை செய்வோம் என்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
-   
          சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 150 சிக்சர் அடித்த 2வது வீரர்: சூர்யகுமார் புதிய மைல் கல்30 Oct 2025கான்பெர்ரா, சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக இந்த மைகல்லை (150 சிக்சர்கள்) எட்டிய 2-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். 
-   
          தமிழகத்தில் வரும் 5-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு30 Oct 2025சென்னை, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரும் 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய 
-   
          தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர்: சீமானுக்கு வைகோ திடீர் புகழாரம்30 Oct 2025ராமநாதபுரம், தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் சீமான் என்று வைகோ தெரிவித்துள்ளார். 
-   
          தங்கம் விலை உயர்வு30 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,100-க்கும், சவரனுக்கு 1,800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.88,800-க்கும் விற்பனையானது. 
-   
          வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: த.வெ.க எதிர்ப்பு30 Oct 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம் - த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் கூறினார். 
-   
          திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு: தேவஸ்தான தலைவர் தகவல்30 Oct 2025திருப்பதி, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு அளித்த பேட்டியில் கூறியதாவது:- முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்படி எஸ். சி. மற்றும் எஸ்.டி. 
-   
          பனையூர் த.வெ.க. அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்திற்கு விஜய் மலர்தூவி மரியாதை30 Oct 2025சென்னை, பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவ படத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 
-   
          பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் சந்திப்பு30 Oct 2025சென்னை, பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் ஒன்றாக சந்தித்துக் கொண்டனர். 
-   
          தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி30 Oct 2025சென்னை, தடகளத்தில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை துணை முதல்வர் உதயநிதி வழங்கி பாராட்டினார். 
-   
          விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்30 Oct 2025மும்பை, விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, கூட்டணி கட்சியுடன் ஆலோசனை செய்தே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். 
-   
          நெல் கொள்முதல் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு30 Oct 2025மதுரை, நெல் கொள்முதல் விவகாரத்தில் தி.மு.க. அரசு பச்சை பொய் கூறுகிறது என்ற எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார். மேலும், அ.தி.மு.க. 
-   
          33 ஆண்டுகளுக்கு பிறகு அணு ஆயுத சோதனை நடத்துகிறது அமெரிக்கா..!30 Oct 2025நியூயார்க், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பிற நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 
-   
          பணி அனுமதியை புதுப்பிக்கும் விவகாரம்: அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்30 Oct 2025நியூயார்க், அமெரிக்காவில் பணி அனுமதியை புதுப்பிக்கும் விவகாரத்தில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ஏள புதிய முடிவால் அங்கு பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயத்தை 






















































