முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் - செங்கோட்டையன்

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2025      தமிழகம்
Senkotaiyan- 2025-09-05

Source: provided

கமுதி : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் சேர்ந்து ஒன்றாக பங்கேற்று, தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.தர்மர் எம்.பி., முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் முருகன், இளைஞர் அணி செயலாளர் டேவிட் அண்ணாதுரை, கமுதி ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், சென்னை மாவட்ட தலைவர் கரிகாலன், ராமநாதபுரம் மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் கபிலன், நிர்வாகி மாணிக்கம் ராஜா, கமுதி நகர் செயலாளர் மோகனபாலன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் தேவர் வாழ்ந்த வீட்டை பார்வையிட்டனர்.

முன்னதாக சசிகலா தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்தார்.அப்போது ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் அங்கு சசிகலாவை சந்தித்தனர். சிறிது நேரம் அவர்கள் 3 பேரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது புகழேந்தி உடனிருந்தார். இவர்களின் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது, “தேவரின் புகழ் நாடு உள்ளவரை நிலைத்து நிற்கும். அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதற்காக நல்லெண்ணத்தோடு, நம்பிக்கையோடு தேவரின் நினைவிடத்தில் சபதம் ஏற்றுக்கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து நின்றுள்ளோம். மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் நிறுவ வேண்டும் என சபதம் எடுத்து உள்ளோம்”் என்றார். தொடர்ந்து டிடிவி தினகரன் கூறுகையில், ” துரோகத்தை வீழ்த்தும் வரை அ.ம.மு.க. ஓயாது. இதுதான் எங்கள் நிலைப்பாடு. தமிழ்நாட்டிலே துரோகம் வீழ்த்தப்பட வேண்டும். உண்மையான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை உருவாக்குவது தான் எங்களது முதல் குறிக்கோள். அ.தி.மு.க. எங்களுக்கு எதிரி இல்லை. எடப்பாடி பழனிசாமிதான் எங்களுக்கு எதிரி. 50 ஆண்டுகளாக தென்மாவட்ட மக்களின் கோரிக்கையாகிய தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்பது எங்களுடைய தேர்தல் வாக்குறுதியிலேயே இருக்கிறது..இவ்வாறு அவர் கூறினார்.

செங்கோட்டையன் கூறுகையில், எம்.ஜி.ஆர். எங்களுக்கெல்லாம் வழிகாட்டி. எங்களை வாழ வைத்தவர் ஜெயலலிதா. திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்துவதற்காகத்தான் அனைவரும் ஒன்றிணைவோம் என்று குரல் கொடுத்தேன். அது இன்று நிறைவேறி இருக்கிறது என்றார். இந்த நிலையில், செங்கோட்டையன் மீது நடவடிக்கை பாயுமா என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வுக்கு யார் துரோகம் செய்தாலும், தலைமையின் கருத்தை முழுமையாக கடைபிடிக்கா விட்டால் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இது தொடர்பாக செங்கோட்டையன் கூறுகையில் , அ.தி.மு.க.வில் இருந்து என்னை நீக்கினால் மகிழ்ச்சிதான். அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட்டு அதுகுறித்து தெரிவிப்பேன்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து