முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாலு ஹாலோவீன் கொண்டாட்டம்: பாரதிய ஜனதா கட்சி கடும் விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2025      இந்தியா
BJP 2023-11-05

Source: provided

புதுடெல்லி: ஆர்.ஜே.டி. நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் தனது பேரப்பிள்ளைகளுடன் ‘ஹாலோவீன்’ திருவிழாவைக் கொண்டாடியதை பா.ஜ.க. கடுமையாக விமர்சித்துள்ளது. 

உ.பி.யில் நடந்த மகா கும்பமேளா நிகழ்வை ‘அர்த்தமற்றது’ என்று லாலு விமர்சித்ததை சுட்டிக்காட்டி லாலுவின் ‘ஹாலோவீன்’ கொண்டாட்டத்தை சாடியுள்ளது பா.ஜ.க.. பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 என இரு தினங்களில் நடக்கவிருக்கும் சூழலில் லாலுவின் ‘ஹாலோவீன்’ கொண்டாட்டமும், பா.ஜ.க.வின் விமர்சனமும் கவனம் பெற்றுள்ளது.

லாலு யாதவின் மகள் ரோஹினி ஆச்சார்யா, தனது பிள்ளைகள் ஹாலோவீன் உடைகளில் இருக்கும் படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதில் லாலு பிரசாத் யாதவும் இருந்தார். ரோஹினி அந்தப் படத்துடன் அனைவருக்கும் ஹாலோவீன் திருவிழா வாழ்த்துகள் என்று பதிவிட்டிருந்தார். இதனை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பா.ஜ.க. விவசாய அணி, பிரிட்டிஷ் திருவிழாவைக் கொண்டாடுவதில் லாலு பிரசாத் யாதவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தது.

“பீகார் மக்களே, மறந்துவிடாதீர்கள். இதே லாலு பிரசாத் யாதவ் தான் சில நாட்களுக்கு முன்னர் மகா கும்ப மேளா என்ற மத நம்பிக்கை சார்ந்த விழாவை அர்த்தமற்றது என்றார். இப்போது பிரிட்டிஷ் ஹாலோவீன் திருவிழாவைக் கொண்டாடுகிறார். நம்பிக்கையை இழிவுபடுத்தும் யாருக்கும் பீகாரிக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.” என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து