முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 4 நவம்பர் 2025      அரசியல்
Vijay 2024-03-21

சென்னை, த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், கட்சியின் அடுத்த கட்ட தொடர்நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க மாமல்லபுரத்தில் இன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று த.வெ.க. அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டம் தொடர்பாக நிர்வாகிகளுக்கு த.வெ.க. முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தலைமை நிலையம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:- கழகத் தோழர்களுக்கு வணக்கம். கழகத் தலைவர் அவர்களின் தலைமையில், இன்று (05.11.2025, புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ள கழகச் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழக அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.

எனவே பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதம் மற்றும் கழக அடையாள அட்டையைக் கட்டாயம் தவறாமல் கொண்டுவந்து, சிறப்புப் பொதுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து