Idhayam Matrimony

கோவை பாலியல் வன்கொடுமை: அ.தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

செவ்வாய்க்கிழமை, 4 நவம்பர் 2025      தமிழகம்
Jail 2024-10-04

Source: provided

கோவை: கோவை பாலியல் வன்கொடுமை துப்பாக்கியால் சுடப்பட்ட வர்கள் உண்மை குற்றவாளிகளா? என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி கேள்வி.

கோவையில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி அ.தி.மு.க. ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மகளிர் அணி சார்பில் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிய தி.மு.க. ஆட்சியை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி தலைமை தாங்கினார். மகளிர் அணி நிர்வாகிகள் லீலா உண்ணி, விமலா கண்ணம்மாள் முன்னிலை வைத்தனர். மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கே.ஆர். ஜெயராம், சூலூர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. மகஸே்வரி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசியதாவது:-

கோவையில் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவரை பலாத்காரம் செய்தவர்கள் முட்புதரில் தூக்கி வீசி உள்ளனர். அப்போது அவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கதறி உள்ளார். அவர் கதறி அழுத பின்னரும் வக்கிர புத்தியுள்ள அந்த கும்பல் அவரை விடாமல் சீரழித்துள்ளது.

இந்த சம்பவத்தை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தலைமை நிலைய செயலாளர் வேலுமணி ஆகியோர் கண்டித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி அறிவிப்பின்பேரில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த சம்பவத்தில் 3 குற்றவாளிகளை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளதாக கூறி உள்ளனர். ஆனால் அவர்களை யாருக்கும் காட்டவில்லை. அவர்கள் உண்மை குற்றவாளிகளா அல்லது போலி குற்றவாளிகளாக என்ற சந்தேகம் உள்ளது.

இந்த சம்பவத்துக்கு அ.தி.மு.க. தலைவர்கள் கண்டித்துள்ள நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தில் கவர்னரை சந்தித்து மனு கொடுத்த கனிமொழி எம்.பி. இதுவரை வாய் திறக்கவில்லை. அதேபோல கம்யூனிஸ்டு மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்த போலீசார் தற்போது இல்லை. தி.மு.க. ஆட்சியில் 4150 குழந்தைகள் முதல் பெண்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாநகரம் தொழில் நகரம். இங்கு ஏராளமானோர் வந்து செல்லும் விமான நிலையத்தின் அருகிலேயே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து