முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த வாரம் ரீ ரிலிசாகும் சேரனின் ஆட்டோகிராப்

செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2025      சினிமா
Autograp 2025-11-11

Source: provided

சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய 'ஆட்டோகிராப்' திரைப்படம் வரும் 14-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. 2004ம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம் இப்போது நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இப்படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்க ஆட்டோகிராப் ரீயூனியன் எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வை சேரன் ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் அமீர், ஆரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  அப்போது பேசிய சேரன். 2004-ம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற, ஒவ்வொரு பூக்களுமே பாடலுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த படம் 21 ஆண்டுகள் கழித்து இப்போது ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது என்றார். பின்னர் பேசிய சினேகா, இந்த படம் நடிக்கும்போது கடுமையான மன உளைச்சலில் இருதேன். அப்போது என் அருகில் வந்து அமர்ந்து என்ன பிரச்னை என்று கேட்டவர் சேரன். நான் ஒன்றும் இல்லை என்று சொன்னாலும், இல்லை ஏதோ பிரச்னை இருக்குனு எனக்கு தெரியும். எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார். அங்கிருந்து தொடங்கியது எங்கள் நட்பு இன்றுவரை தொடர்கிறது. நண்பர்களாக இருக்க முடியும் என்று இப்போதும் நிரூபித்திருக்கிறோம் என்று பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து