முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: காயமடைந்தவர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்

புதன்கிழமை, 12 நவம்பர் 2025      இந்தியா
Modi-2025-11-12

புது டெல்லி, டெல்லி  செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர். இந்த நிலையில், பூடானிலிருந்து திரும்பிய பிரதமர் மோடி, நேராக மருத்துவமனை சென்று, காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அரசுமுறைப் பயணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கிருந்து நாடு திரும்பிய நிலையில், நேராக மருத்துவமனை சென்று, டெல்லி  கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரடியாகச் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

நவ. 10ஆம் தேதி, டெல்லி  செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே இரவு 6.52 மணியளவில் காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில், அருகில் இருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இதில் 12 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், 2 நாட்கள் அரசுமுறைப் பயணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி, பயணத்தை நிறைவு செய்துகொண்டு நேற்று புது டெல்லி  திரும்பினார். அவர், நேராக டெல்லி யில் உள்ள லோக் நாயக் மருத்துவமனைக்குச் சென்று, அங்கு குண்டுவெடிப்பில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடமும் பிரதமர் மோடி கேட்டறிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பிரதமர் மோடி வருவது தெரிந்ததும் ஊடக துறையினர் குவிந்து விடாமல் இருப்பதற்காக, தனியாக மருத்துவமனையின் பின்வாசல் வழியே உள்ளே சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து