முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடாவில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்

வியாழக்கிழமை, 13 நவம்பர் 2025      இந்தியா
Air-India

Source: provided

புதுடெல்லி: கனடாவில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீர் வெடிகுண்டு மிரட்டலை அடுத்து டெல்லியில் தடையிறக்கப்பட்டது.

கனடாவில் உள்ள டொரண்டோ விமான நிலையத்தில் இருந்து ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் நேற்று காலை டெல்லி நோக்கி புறப்பட்டது. இந்நிலையில், அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறைக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் டெல்லி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில், வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் விமான நிலையத்தில் குவிக்கப்பட்டனர். அதே சமயம், விமானத்தில் இருந்த ஊழியர்கள் அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து அந்த விமானம் மதியம் 3.40 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு, விமானம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கிடைக்காததால், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது உறுதிசெய்யப்பட்டது. சமீபத்தில் டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து