முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் காற்று மாசு; சுப்ரீம் கோர்ட் கவலை

சனிக்கிழமை, 15 நவம்பர் 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, டெல்லியில் காற்று மாசு குறித்து சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்துள்ள நிலையில், காற்று மாசு வழக்கில் வழக்கறிஞர்கள் காணொலி காட்சி மூலம் ஆஜராக அறிவுறுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டும் காற்று மாசு தீபாவளிக்கு பிறகு மிக அதிகமாகவே இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த செயற்கை மழையை வர வைக்கலாம் என்ற யோசனையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் தோல்வியில் முடிந்தது. அது பற்றிய மறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி அதுல் சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.

அப்போது பேசிய நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, “நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. வழக்கறிஞர்கள் ஏன் நேரில் ஆஜராகிறீர்கள்? காணொலி காட்சி மூலம் ஆஜராகும் வசதி இருக்கும்போது அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த காற்று மாசு நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடும்” என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “வழக்கறிஞர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்கிறோம்” என்றார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, “முகக்கவசம் அணிவது மட்டும் போதுமானதாக இருக்காது. அது இந்த பிரச்சினைக்கு தீர்வாகாது. இது தொடர்பாக தலைமை நீதிபதியிடம் கலந்தாலோசிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் பயிர்க்கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பஞ்சாப் மற்றும் அரியானா அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அந்த வழக்கு வரும் 17-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து