முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2025      தமிழகம்
cm 2024-12-03

Source: provided

சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பள்ளிகள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று முதல்வர்  மு.க.ஸ்டாலின், நடிகர்கள் அஜித், அரவிந்த்சாமி, லிவிங்ஸ்டன், நடிகை குஷ்பு மற்றும் இயக்குநர் முருகதாஸ், செஸ் வீரர் பிரக்ஞானந்தா ஆகியோர் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் குறித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து