முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மசோதா விவகாரம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு தி.மு.க. வரவேற்பு

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2025      இந்தியா
DMK-Offces 2023 03 31

புதுடெல்லி, மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும விவசாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு தி.மு.க. வரவேற்பு அளித்துள்ளது.

மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி மற்றும் கவர்னருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என தீர்ப்பளித்துள்ள சுப்ரீம் கோர்டின் அரசியல் சாசன அமர்வு, இதுகுறித்து இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பை அரசியலமைப்புக்கு எதிரானது என கூறி நிராகரித்துள்ளது. மேலும், மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும், எந்த பதிலும் அளிக்காமலும் கவர்னர்கள் கிடப்பில் போட அதிகாரம் இல்லை.

மாநில அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தல், நிராகரித்தல் அல்லது ஜனாதிபதிக்கு அனுப்புதல் ஆகிய மூன்று விருப்பங்களில் ஒன்றை மட்டுமே கவர்னர் தேர்ந்தெடுக்க விருப்புரிமை உள்ளது என்றும் கோர்ட் கூறியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை தி.மு.க. வரவேற்றுள்ளது. இது தொடர்பாக தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறியதாவது: “உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது?” என்று கேட்டபோது, “கவர்னர் வேலை பார்ப்பது” என்று தலைவர் கலைஞர் அவர்கள் பதிலளித்தார்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, தனது மக்களுக்கான உரிமைகளைக் காத்திடவும், மாநில நலன்களைப் பாதுகாக்கவும் சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பும் மசோதாக்களை, காலம் தாழ்த்தாமல் முத்திரையிட்டு டெல்லிக்கு அனுப்புவது என்னும் எளிய பணியை மட்டுமே ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது. நேற்று உச்சநீதிமன்றமும் அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இனி ஏனும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, ஆளுநர் அவர்கள் அப்பணியை செவ்வனே செய்வார் என்று நம்புகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அதேபோல், தி.மு.க. மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில்:“மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் தீர்மானத்தை கவர்னர் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அரசியல் அமைப்புக்கு எதிராக ஏதேனும் முரண்பாடுகள் தெரிந்தால், கவர்னர் விளக்கம் கேட்கலாம். அதே நேரத்தில் மசோதாக்களை நிராகரிக்க முடியாது. இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று அவர் கூற முடியாது; அதற்கான அதிகாரம் கவர்னருக்கு இல்லை. எம்.பி., எம்.எல்.ஏக்களால் ஜனாதிபதி தேர்வு செய்யப்படுகிறார்; துணை ஜனாதிபதி எம்.பிக்களால் தேர்வு செய்யப்படுகிறார்; பிரதமரும் தேர்வு செய்யப்படுகிறார். ஆனால், கவர்னர் நியமனம் செய்யப்படுகிறார்” என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து