முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக ஆண்டுகள் முதல்வர் பதவி: டாப் 10-ல் 8-வது இடத்திற்கு முன்னேறினார் நிதிஷ்குமார்

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2025      இந்தியா
nitish-kumar

பாட்னா, அதிக ஆண்டுகள் முதல்வர் பதவியில் நிதிஷ்குமார் டாப் 10-ல் 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

பீகார் மாநிலத்தின் முதல்வராக 10-வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் அதிக ஆண்டுகள் முதல்வர்  பதவி வகித்த டாப்-10 பட்டியலில் இணைந்துள்ளதுடன் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியையும் முந்தியுள்ளார். முதல் 10 இடத்தில் இருக்கும் முதல்வர்கள், ஆண்டுகள் மற்றும் மாநிலங்களின் விவரம் வருமாறு:-

1) பவண்குமார் சாம்ளிங் - 25 ஆண்டுகள் (1994 டிசம்பர் 12 முதல் 2019 மே 26) - சிக்கிம், 2) நவின் பட்னாயக் - 24 ஆண்டுகள் (2000 மார்ச் 5 முதல் 2024 ஜூன் 11 வரை) - ஒடிசா, 3) ஜோதி பாசு - 23 ஆண்டுகள் (1977 ஜூன் 21 முதல் 2000 நவம்பர் 5 வரை) - மேற்கு வங்காளம், 

4) ஜிகாங் அபான்ஜ் - 22 ஆண்டுகள் (1980 ஜனவரி 18 முதல் 1999 ஜனவரி 19 வரை, 2003 ஆகஸ்டு 3 முதல் 2007 ஏப்ரல் 9 வரை) - அருணாச்சலபிரதேசம் 5) லால் தன்ஹாவ்லா - 22 ஆண்டுகள் (1984 மே 5 முதல் 1986 ஆகஸ்டு 21 வரை, 1989 ஜனவரி 24 முதல் 1998 டிசம்பர் 3 வரை, 2008 டிசம்பர் 11 முதல் 2018 டிசம்பர் 15 வரை) - மிசோரம், 6) விர்பந்ரா சிங் - 21 ஆண்டுகள் (1983 ஏப்ரல் 8 முதல் 1990 மார்ச் 5 வரை, 1993 டிசம்பர் 3 முதல் 1998 மார்ச் 24 வரை, 2003 மார்ச் 6 முதல் 2007 டிசம்பர் 30 வரை, 2012 டிசம்பர் 25 முதல் 2017 டிசம்பர் 27 வரை) - இமாசலபிரதேசம், 7) மாணிக் சர்கார் - 19 ஆண்டுகள் (1998 மார்ச் 11 முதல் 2018 மார்ச் 9 வரை) - திரிபுரா. 

8) நிதிஷ்குமார் -19 ஆண்டுகள் (2000 மார்ச் 3 முதல் 2000 மார்ச் 11 வரை, 2005 நவம்பர் 24 முதல் 2014 மே 20 வரை, 2015 பிப்ரவரி 22 முதல் 2025 நவம்பர் 19 வரை) - பீகார், 9) கருணாநிதி - 18 ஆண்டுகள் (1969 பிப்ரவரி 10 முதல் 1976 ஜனவரி 31 வரை, 1989 ஜனவரி 27 முதல் 1991 ஜனவரி 30 வரை, 1996 மே 13 முதல் 2001 மே 14 வரை, 2006 மே 13 முதல் 2011 மே 16 வரை - தமிழ்நாடு, 10) பிரகாஷ் சிங் பாதல் - 18 ஆண்டுகள் (1970 மார்ச் 27 முதல் 1971 ஜூன் 14 வரை, 1977 ஜூன் 20 முதல் 1980 பிப்ரவரி 17 வரை, 1997 பிப்ரவரி 12 முதல் 2002 பிப்ரவரி 26 வரை, 2007 மார்ச் 1 முதல் 2017 மார்ச் 16 வரை - பஞ்சாப்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து