முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது போட்டி அட்டவணை வெளியீடு

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2025      விளையாட்டு
Junior-World-Cup 2025-11-20

Source: provided

துபாய்: ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி ஜன.15-ந்தேதி புலவாயோவில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

4 பிரிவுகளாக...

16-வது ஐ.சி.சி. ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடைபெற உள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவுகளில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெறும்.

ஆஸ்திரேலியா...

இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான் மற்றும் இலங்கை அணிகளும், ‘பி’பிரிவில் இந்தியா, வங்காளாதேசம், அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளும், ‘சி’ பிரிவில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளும், ‘டி’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தான்சானியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளும் இடம்பெற்றுள்ளன.

ஜன.15-ம் தேதி...

இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள 5 முறை சாம்பியனான இந்திய அணி ஜன.15-ந்தேதி புலவாயோவில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் மோதுகிறது. 17-ந் தேதி வங்காளதேசத்தையும், 24-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது. இறுதிப்போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரே மைதானத்தில் நடைபெற உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து