முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வீரர்களுக்கு வரவேற்பு

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2025      விளையாட்டு
02

Source: provided

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து இரு அணிகள் பங்கேற்கும் 2-வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் கவுகாத்திக்கு சென்றடைந்தனர். மேள தாளங்கள் முழங்க அவர்கள் வரவேற்கப்பட்டனர். கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டதில் இருந்து கவுகாத்திக்கு சென்றது வரை உள்ள வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

கவுதம் காம்பீர் சாமி தரிசனம்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் கவுகாத்தியில் உள்ள காமாக்யா தேவி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

சாதனை பட்டியலில் ரஹீம்

அயர்லாந்து கிரிக்கெ அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் வங்கதேச அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை முஷ்பிகுர் ரஹீம் படைத்துள்ளார். 100-வது போட்டியில் விளையாடிய ரஹீம் சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார். அதன்படி 100-வது போட்டியில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரஹீம் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் அவர் 11-வது வீரராக சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ரஹீமின் 13-வது சதமாகும். இதன் மூலம் சக நாட்டு வீரர் மோமினுல் ஹக்கின் சாதனையை சமன் செய்துள்ளார்.

பாக்., கேப்டன் ராஜினாமா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசார் அலி. இவர் பாகிஸ்தானின் தேர்வுக்குழு உறுப்பினர் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் தலைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தேர்வுகுழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். அத்துடன் இளைஞர் மேம்பாட்டுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 12 மாத பதவிக்காலத்திற்குப் பிறகு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். அவர் ராஜினாமா செய்வதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் ஏழுதியுள்ளார். அவரது ராஜினாமாவை பிசிபி ஏற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் அசார் அலிக்கும் நீண்ட காலமாக இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஷாஹீன்ஸ் (பாகிஸ்தான் A அணி) மற்றும் அண்டர்-19 கிரிக்கெட் தொடர்பான அனைத்து விவகாரங்களும் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அஹ்மத்-க்கு திடீரென வழங்கப்பட்டது. இதனால் அசார் அலி ஏமாற்றம் அடைந்தார். இதனால் தான் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.ஆஷஸ் என்பது இவ்விரு அணிகள் இடையே நூற்றாண்டுக்கு மேலாக நடக்கும் பாரம்பரியமிக்க ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடராகும். அதற்கென தனி வரலாறும் உண்டு. தற்போதைய ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் பெர்த்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அந்த அணியில் ஜேக் வெதரால்ட் மற்றும் பிரெண்டன் டாகெட் அறிமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஜேக் வெதரால்ட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், பிரெண்டன் டாகெட், ஸ்காட் போலண்ட். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து