முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாட்ஸ் அப் பயன்படுத்த இனி ஆக்டிவ் சிம் கார்டு கட்டாயம்: மத்திய அரசு புதிய உத்தரவு

திங்கட்கிழமை, 1 டிசம்பர் 2025      இந்தியா
Whatsapp

டெல்லி, மோசடிகளை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு, வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வாட்ஸ் அப் என்பது தற்போது தவிர்க்க முடியாத சமூக வலைத்தளங்களில் ஒன்றாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் பல கோடி பேர் வாட்ஸ் சேவையை பயன்படுத்துகிறார்கள். குறுஞ்செய்தி அனுப்புவது மட்டும் இன்றி தற்போது வாட்ஸ் அப் வழியாக அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும். வாட்ஸ் அப்களை டெஸ்க்டாப்பில் அதாவது கணிணி வழியாகவும் இணைத்து பயன்படுத்தலாம். ஆனால், இந்த வசதியை பயன்படுத்தி பல்வேறு மோசடிகளும் அரங்கேறுவதாக சமீப காலமாக புகார்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு, வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன்படி, மொபைலில் ஆக்டிவ் சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ் அப் கணக்கு இனி இயங்காது. மொபைலில் உள்ள சிம் கார்டு, அந்தந்த செயலிகளில் இணைக்கப்பட்டிருப்பதை 90 நாட்களுக்கு ஒரு முறை உறுதி செய்ய வேண்டும். அதேபோல வெப்-இல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தானாகவே லாக் அவுட் ஆகிவிடும். இது டெலிகிராம், சிக்னல் செயலிகளுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. 6 மணி நேரம் கழித்து மீண்டும் கியூஆர் கோடு பயன்படுத்தி ஸ்கேன் செய்த பிறகுதான் வெப் வாட்ஸ் அப் பயன்படுத்த முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து