முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் ஹசாரே தொடரில் கோலி

புதன்கிழமை, 3 டிசம்பர் 2025      விளையாட்டு
Verat Koil 2023 08 13

Source: provided

மும்பை : 15 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விஜய் ஹசாரே தொடரில் விளையாட விராட் கோலி விருப்பம் தெரிவித்துள்ளதாக தில்லி கிரிக்கெட் சங்கம் உறுதிபடுத்தியுள்ளது.

திடீர் ஓய்வு அறிவிப்பு...

இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களும், மூத்த வீரர்களுமான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடந்தாண்டு (2024) இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். அதன்பின், இந்தாண்டில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக டெஸ்ட்டில் இருந்து இருவரும் விடைபெற்றனர். டி20, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துவிட்டபோதிலும், இருவரும் இந்திய அணிக்காக தொடர்ந்து 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வரை, ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள் எனக் கூறப்படுகிறது.

கட்டாய ஓய்வுபெற... 

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை விளையாடுவது சாத்தியமில்லாதது. அவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தாவிட்டால் இருவரையும் கட்டாய ஓய்வுபெற அறிவுறுத்தப்படுவார்கள் எனவும் பி.சி.சி.ஐ.யின் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் வெளியாகின. அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா ஒரு அரைசதம் மற்றும் ஒரு சதம் விளாசினார். விராட் கோலி முதலிரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆன நிலையில், 3-வது போட்டியில் 74 ரன்கள் குவித்தார்.

உள்ளூர் போட்டிகளில்... 

கடந்த ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் துவக்கம் முதலே அதிரடி காட்டிய விராட் கோலி, 135 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதையும் தனதாக்கினார். இந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் கட்டாயம் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவுறுத்தி வருகிறது. 

ரோகித் விருப்பம்....

அதன் ஒருபகுதியாக, உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையில் விளையாட ரோகித் சர்மா விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும், விஜய் ஹசாரே தொடரில் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தில்லி கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தில்லி அணிக்காக விராட் கோலி விளையாடுவார் என்று தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் ரோஹன் ஜேட்லி உறுதிபடுத்திள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து