முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மையை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்: பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2025      இந்தியா
modi

புது தில்லி, ‘தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை முயற்சிகளைக் கண்டு வியப்படைந்தேன். நாட்டின் அனைத்து விவசாயிகளும் இந்த இயற்கை வேளாண் முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.

மேலும், ‘நமது நிலத்தின் வளம், மண்ணின் ஈரப்பதம் மற்றும் நீண்டகால வேளாண் நிலைத்தன்மை ஆகியவற்றைப் பாதிக்கும் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைச் சாா்ந்திருக்கும் சவால்களைச் சமாளிக்க இயற்கை வேளாண்மை பெரிதும் உதவும்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

வேளாண்மைக்கு திருப்பியவா்கள்: இதுதொடா்பாக பிரதமா் மோடி தனது ‘லிங்க்ட்இன்’ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட கட்டுரையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் கோவை நகரில் கடந்த நவ. 19-ஆம் தேதி நடைபெற்ற ‘தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் பலதரப்பட்ட நபா்களின் பங்களிப்பைப் பாா்த்து நான் வியந்தேன். 

விஞ்ஞானிகள், வேளாண் உற்பத்தியாளா் அமைப்புகளின் தலைவா்கள், பாரம்பரிய விவசாயிகள், முதல்தலைமுறை பட்டதாரிகள், குறிப்பாக அதிக சம்பளம் தரும் பெருநிறுவன வேலைகளை விட்டுவிட்டு மீண்டும் இயற்கை வேளாண்மைக்குத் திரும்பியவா்கள் உள்ளிட்டோரைச் சந்தித்தேன். தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை முயற்சிகளைக் கண்டு வியப்படைந்தேன். நாட்டின் அனைத்து விவசாயிகளும் இந்த இயற்கை வேளாண் முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்

இயற்கை வேளாண்மை என்பது இந்தியாவில் காலம் காலமாக இருக்கும் பாரம்பரிய அறிவையும், புதிய சுற்றுச்சூழல் கொள்கைகளையும் பயன்படுத்தி, எந்த ரசாயனமும் இல்லாமல் பயிா்களை வளா்ப்பதாகும். இந்த முறையில், செடிகள், மரங்கள், கால்நடைகள் ஆகியவற்றை ஒரே இடத்தில் வைத்து, இயற்கைச் சூழலை (பல்லுயிா்த்தன்மை) ஆதரிக்கும் ஒரு பல்வகைப்பட்ட பண்ணை முறை பின்பற்றப்படுகிறது.

வெளிபொருள்களைச் சாா்ந்து இருக்காமல், பண்ணையில் உள்ள கழிவுகளை மறுசுழற்சி செய்வது, மண்ணில் காற்றோட்டத்தை அதிகரிப்பது போன்ற வழிமுறைகள் மூலம் மண்ணின் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.

மத்திய அரசின் ‘தேசிய இயற்கை வேளாண்மை இயக்கம்’ மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் ஏற்கெனவே இயற்கை வேளாண் முறையைப் பின்பற்றி வருகின்றனா். இயற்கை வேளாண்மையைப் பின்பற்றுவது பற்றிச் சிந்திக்க நாட்டின் ஒவ்வொரு விவசாயிக்கும் அழைப்பு விடுக்கிறேன். நம் பாரம்பரிய அறிவு, அறிவியல் ரீதியான அங்கீகாரம், அரசின் ஆதரவு ஆகியவை ஒன்றாக இணையும்போது, இயற்கை வேளாண்மை நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக மாறும் என்று பிரதமா் மோடி கூறியுள்ளாா். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து