முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் போர் விவகாரம் தொடர்பான அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது - அதிபர் புதின்

வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2025      உலகம்
Putin 2024 08 11

மாஸ்கோ, உக்ரைன் போர் விவகாரத்தில் அமெரிக்க அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்கப்பட்டதாக ரஷ்ய அதிபர்  புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர், மியாமி நகரில் நேற்று  உக்ரைன் அரசு செயலாளர் ருஸ்டெம் உமெரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்கிடையில், அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் ரஷ்ய அதிபர் புதின் சுமார் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இது குறித்து புதின் கூறுகையில், உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது என்று தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தை மிகவும் அத்தியாவசியமானது என்று குறிப்பிட்ட அவர், அதே சமயம் இது மிகவும் கடினமான பணி என்றும் தெரிவித்தார். சுமார் 4 ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக முயற்சித்து வருகிறார். ஏற்கனவே அலாஸ்காவில் புதினை சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் பல்வேறு கட்டங்களாக டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து