முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சிக்கு உரிமை கோரி வழக்கு: நீதிமன்றத்தில் ராமதாஸுக்கு வெற்றி; டெல்லியில் ஜி.கே.மணி பேட்டி

வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2025      தமிழகம்
GK-Mani-2025-05-31

சென்னை, கட்சி உரிமை கோரிய வழக்கில் நீதிமன்றத்தில் ராமதாஸ்சுக்கு வெற்றி என்று ஜி.கே.மணி தெரிவித்தார்.

பா.ம.க.வில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், கட்சிக்கு உரிமை கோரி இருவரும் தேர்தல் ஆணையம் சென்றனர். இரு தரப்பு ஆவணங்களையும் ஆராய்ந்த தேர்தல் ஆணையம் '2026ம் ஆன்டு ஆகஸ்ட் 1ம் தேதி வரை அன்புமணி தான் பா.ம.க.வின் தலைவர். பா.ம.க. நிர்வாகிகள் அன்புமணியை தான் தலைவராக தேர்வு செய்துள்ளனர். அதற்கான தரவுகள் உள்ளன' என்று அதிரடியாக அறிவித்தது.

தேர்தல் ஆணையம் ஜனநாயகப் படுகொலை செய்வதாக கூறிய ராமதாஸ் தரப்பு, இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று விசாரனைக்கு வந்த நிலையில், அன்புமணி தரப்பும், ராமதாஸ் தரப்பும் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தன. அப்போது தேர்தல் ஆணையம் எங்களிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் தான் அன்புமணியை தலைவர் என கூறினோம். கட்சிக்கு உரிமை கோரினால் ராமதாஸ் தரப்பு உரிய ஆவணங்களை கொடுக்க வேண்டும் என்று கூறியது.

மனுவை விசாரித்த நீதிபதி, அங்கீகரிக்கபடாத கட்சியின் உரிமை கோரல் விவகாரத்தில் ஒரு சாரார் கருத்தை பெற்று தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியாது. அங்கீகரிக்கபடாத கட்சிகளின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்று உத்தரவிட்டதுடன் பா.ம.க. உரிமை கோரல் விவகாரத்தில் உரிமையியல் நீதிமன்றத்தில் நாடலாம் எனக்கோரி வழக்கை முடித்து வைத்தார். இந்த நிலையில், அன்புமணி தரப்புக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் எதிராக ராமதாஸ் தரப்பினர் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் நடத்தினார்கள். இதில் ஜி.கே.மணி, எம்.எல்.ஏ அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்துக்கு முன்பு பேசிய ஜி.கே.மணி, அன்புமணி தலைவர் என கூறிக்கொண்டு போலியான ஆவணங்கள் கொடுத்தது செல்லாது. அது ரத்து செய்யப்படுகிறது என்ற தீர்ப்பை டெல்லி ஐகோர்ட் வழங்கியிருக்கிறது. இது ராமாதாஸுக்கும், பா.ம.க.வுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அன்புமணி தேர்தல் ஆணையத்தை கையில் போட்டுக்கொண்டு போலி ஆவணங்கள் கொடுத்து 2026ம் ஆண்டு வரை பதவியில் இருப்பேன் என கூறி வருகிறார். நீதிமன்ற உத்தரவின் மூலம் பா.ம.க.வுக்கு தான் தலைவர் என அன்புமணி கூற முடியாது. மாம்பழ சின்னமும் அவர்களுக்கு கிடையாது. தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளக் கூடாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து