முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கான இலவச இ-விசா வழங்கும் திட்டம் : புடின் முன்னிலையில் மோடி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 5 டிசம்பர் 2025      இந்தியா
Modi-Puthin 2025-12-05

Source: provided

புதுடெல்லி : ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு, 30 நாட்கள் இலவச இ-விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில், பிரதமர் மோடி அறிவித்தார்.

டெல்லியில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பிறகு பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் ஆகிய இருவரும் கூட்டாக நிருபர்கள் சந்தித்தனர். அப்போது என் நண்பர் புடின் எனக்கூறிய பேட்டியை தொடங்கிய பிரதமர் மோடி, இந்தியா - ரஷ்யா உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: இந்தியா, ரஷ்யா இரு நாட்டு உறவு பலமானது . இந்த நட்புறவுக்கு 25 ஆண்டுக்கு முன்பே, அதிபர் புடின் நமக்கு உதவியாக இருந்தார்.

ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு 30 நாட்கள் இலவச இ-விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். பல மாற்றங்களுக்கு மத்தியிலும் இந்தியா-ரஷ்யா உறவு உறுதியாக உள்ளது. இந்தியா-ரஷ்யா ஏற்றுமதி வர்த்தகத்தில் புதிய கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. இருதரப்பு உறவுகளுக்கு இடையே எரிசக்தி துறை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உலகில் அமைதிக்காக ரஷ்யாவுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும். உலகில் பயங்கரவாத ஒழிப்பில் முழு கவனத்துடன் செயல்படுவோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் நீண்ட காலமாக தோளோடு தோள் ஒன்றாக நின்று போராடி வருகின்றன. நமது இருதரப்பு உறவுகள் பல வரலாற்று மைல்கற்களைக் கடந்து செல்லும் நேரத்தில், ரஷ்ய அதிபர் புடின் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியா-ரஷ்யா ஆகிய இருநாடுகளுக்கு இடையே உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம். 2030ம் ஆண்டு வரை இந்தியா-ரஷ்யா பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்துக்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். உக்ரைன் மோதலுக்கு அமைதியான முறையில் நிரந்தர தீர்வு காண மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். உக்ரைன் பிரச்னையில் இந்தியா ஆரம்பத்திலிருந்தே அமைதியை ஆதரித்து வருகிறது. உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த இந்தியா எப்போதும் தனது பங்களிப்பை வழங்க தயாராக உள்ளது, எதிர்காலத்திலும் இந்த நிலைப்பாடு தொடரும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ரஷ்ய அதிபர் புடின் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது., இந்தியாவுக்கு எண்ணெய், எரிவாயு, நிலக்கரி வழங்கும் நம்பிக்கைக்கு உரிய நாடு ரஷ்யா. இந்தியாவும், ரஷ்யாவும் சுதந்திரமான நாடுகள். கூடங்குளம் அணு மின் நிலையம் மூலம் மக்களுக்கு மலிவான விலையில் மின்சாரம் கிடைக்கிறது. இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்திய ராணுவம் நவீன வசதிகளை பெற ரஷ்யா உதவி செய்து வருகிறது. இந்தியா , ரஷ்யா இடையிலான இருதரப்பு விஷயங்கள் முழு அளவில் விவாதிக்கப்பட்டது. அணுமின் உற்பத்திக்கான கூடங்குளம் திட்டத்தை இரு நாடுகளும் இணைந்து செயல்படுத்துகிறோம். இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வழங்குவதை ரஷ்யா தொடரும்.

கடந்த ஆண்டு ரூ.6.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் இந்தியா-ரஷ்யா இடையே வர்த்தகம் நடந்துள்ளது. பாதுகாப்புத் துறை ஒப்பந்தம்,இந்தியா -ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்ததுவர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டும் ஈர்க்கக்கூடிய அளவில் இருக்கும் என்று கணித்துள்ளோம். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு ரஷ்யா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இருதரப்பு வர்த்தக வருவாய் 12 சதவீதம் அதிகரித்து ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. இவ்வாறு ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து