முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடு, கார் கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்கலாம் - ரிசர்வ் வங்கி தகவல்

வெள்ளிக்கிழமை, 5 டிசம்பர் 2025      இந்தியா
RBI 2023-04-27

Source: provided

டெல்லி : வீடு, கார் கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்கலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்கள் அளிக்கிறது. அந்த கடன்களுக்கு பிற வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு வட்டி செலுத்துகின்றன. இந்த வட்டி விகிதம் ரெப்போ என்று அழைக்கப்படுகிறது. இதனிடையே, நாட்டின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றியமைப்பது வழக்கம்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நிதி நிலை கொள்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் 0.25 சதவீதம் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் 5.50 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வீடு, கார் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து