முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதினுக்கு பகவத் கீதையை பரிசளித்தார் பிரதமர் மோடி

வெள்ளிக்கிழமை, 5 டிசம்பர் 2025      இந்தியா
PM--Putin-2025-12-05

டெல்லி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பிரதமர் மோடி பகவத் கீதையை பரிசாக அளித்தார்.

2 அரசு முறை பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்துள்ளார். தனி விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்த புதினை விமான நிலையத்திற்கே நேரில் சென்று பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் இருவரும் ஒரே காரில் பயணித்தனர். பிரதமர் இல்லத்தில் புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளித்தார்.

இதனை தொடர்ந்து டெல்லியில் நடைபெறும் இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் பங்கேற்றனர்.  இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினுக்கு பகவத் கீதையை பிரதமர் மோடி பரிசளித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு விருந்துக்குப்பின் புதினுக்கு பகவத் கீதையை மோடி பரிசளித்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், பகவத் கீதையை ரஷ்ய அதிபர் புதினுக்கு பரிசளித்துள்ளேன். கீதையின் போதனைகள் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து