முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூருவில் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

வெள்ளிக்கிழமை, 5 டிசம்பர் 2025      இந்தியா
Tairn 2023-05-25

Source: provided

பெங்களூரு : பெங்களூருவில் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஊதா வழித்தடத்தில் நேற்று காலை வழக்கம் போல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டது. அலுவலகத்திற்கு செல்வபர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பலர் அந்த ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அந்த ரயில் கெங்கேரி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்தபோது வாலிபர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த கொண்டார். இதனால் ஊதா வழித்தடத்தில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த நபரின் உடலை அப்புறப்படுத்தினர். முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட நபரின் பெயர் ஷந்தாகோட் பட்டீல் என்பது தெரியவந்துள்ளது. 

தொடர்ந்து இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம், காலை நேரத்தில் ரயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டதால் மெட்ரோ ரயிலை நம்பியிருந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனிடையே மெட்ரோ நிர்வாகத்தினர் துரிதமாக செயல்பட்டு, காலை 9.40 மணியளவில் ஊதா வழித்தடத்தில் மீண்டும் மெட்ரொ ரயில் சேவை தொடங்கப்பட்டதாக அறிவித்தனர். இதையடுத்து வழக்கம்போல் மெட்ரோ ரயில் சேவை இயங்க தொடங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து