எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் சமூக நல்லிணக்கத்துடன் வாழும் 10 கிராம ஊராட்சிகளுக்கு விருது, கல்வி உதவித்தொகை, சுயதொழில் புரிந்திட கடனுதவி என ரூ.265.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 9,371 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி, ரூ.74.20 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (6.12.2025) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற முதல்வரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 74 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவியர்களுக்கான 2 சமூகநீதி விடுதிக் கட்டிடங்கள், 21 பள்ளிகளுக்கான கூடுதல் கட்டிடங்கள் மற்றும் 25 கிராம அறிவுசார் மையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
மேலும், ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் முதல்வரின் தாயுமானவர் திட்டம், 10 கிராம ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்கத்திற்கான கிராம ஊராட்சி விருது, கல்வி உதவித்தொகை, சுயதொழில் புரிந்திட மானியம், என மொத்தம் 265.50 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 9371 பயனாளிகளுக்கு வழங்கினார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், திருச்சிராப்பள்ளி – ராஜா காலனி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் 25.13 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவியர்களுக்கான 2 சமூகநீதி விடுதிக் கட்டிடங்கள்; விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, அரியலூர், கரூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர் மயிலாடுதுறை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 21 பள்ளிகளுக்கு 25.63 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் இதர கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்தார்.
விழுப்புரம், தூத்துக்குடி, விருதுநகர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர், கரூர், தருமபுரி, சேலம், திருவள்ளூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 23.44 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 25 கிராம அறிவு சார் மையங்கள் என மொத்தம் 74.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தமிழ்நாடு முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.
முதல்வரின் தாயுமானவர் திட்டமானது, நலத்திட்டங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் பன்முக ஆதரவு கட்டமைப்பு மூலம் தீவிர வறுமையில் வாடும் குடும்பங்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டதாகும். இத்திட்டத்தின் மூலம் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, அக்குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி, தொழில் கடன், வங்கிக் கடன், சுயஉதவிக் குழுக்களில் இணைப்பு, முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது.
முதல்வரின் தாயுமானவர் திட்ட பயனாளிகளுக்கு அவர்களின் தேவைகளின் அடிப்படையில் முதற்கட்டமாக 1,00,000 பயனாளிகளுக்கு நலிவு நிலை குறைப்பு நிதியாக ரூ.75 கோடி வழங்கப்படுகிறது. அதன்படி, முதல்வரின் தாயுமானவர் திட்டத்தில் 505 பயனாளிகளுக்கு அவர்களின் தேவையின் அடிப்படையிலான திட்ட பயன்கள் மற்றும் நலிவு நிலை குறைப்பு நிதியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சாதி வேறுபாடின்றி சமூக நல்லிணக்கத்துடன் வாழும் 10 கிராம ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து சமூக நல்லிணக்க கிராம ஊராட்சி விருதுகளையும், அதன் வளர்ச்சி பணிக்காக தலா ரூ.1 கோடி வழங்கும் திட்டத்தின் கீழ், 2025 – 26 ஆம் நிதியாண்டில் ராமநாதபுரம் மாவட்டம் - மேலமடை, விழுப்புரம் மாவட்டம் - பரையந்தாங்கல், தென்காசி மாவட்டம் - கே. ஆலங்குளம், கலிங்கப்பட்டி, தஞ்சாவூர் மாவட்டம் - சூரியனார்கோவில் மற்றும் வெங்கடசமுத்திரம், சேலம் மாவட்டம் - மணிவிழுந்தான், செங்கல்பட்டு மாவட்டம் - மண்ணிவாக்கம், கோயம்புத்தூர் மாவட்டம் - ஒட்டர்பாளையம், நாகப்பட்டினம் மாவட்டம்- தேவூர் ஆகிய 10 கிராம ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்கிராம ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க விருதுகள் மற்றும் வளர்ச்சிப் பணிக்காக 10 கோடி ரூபாய் நிதியினை தமிழ்நாடு முதல்வர் வழங்கினார்.
நரிக்குறவர் சமூகத்தினருக்கு கோட்டூர்புரத்தில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான குடியிருப்புகளுக்கான ஆணைகளை 121 பயனாளிகளுக்கும் 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான டாக்டர் அம்பேத்கர் பாடசாலை கட்டுமானப் பணிக்கான பணி ஆணை; விளிம்பு நிதி மற்றும் நிதி உதவி திட்டத்தின் கீழ் கோயம்பேடு காய்கறி சந்தையில் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வணிக வளாகத்தில் 22 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு; இருளர் சமூகத்தினரின் வாழ்வாதாரத்திற்காக, 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கொச்சி - தேசிய மீன் மரபணு வளங்கள் அலுவலகத்துடன் இணைந்து 105 பயனாளிகள் பயன்பெறும் வகையில் பழவேற்காட்டில் நண்டு வளர்ப்பு மற்றும் அலங்கார மீன் வளர்ப்புப் பிரிவுகளை அவர் துவக்கி வைத்தார்.
முதல்வரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு (CM-ARISE) திட்டத்தின் கீழ் 1336 பயனாளிகளுக்கு 73 கோடி ரூபாய் மானியம்; மத்திய அரசு நிதியுதவி திட்டத்தின் கீழ் 5516 ஆதிதிராவிட பயனாளிகளுக்கு 60 கோடி ரூபாய் தொழில்களுக்கான மானியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றி அவர்களின் சமூகநிலையினை உயர்த்திடும் நோக்குடன், பெண்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தப்பட்டு வரும், நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தின் கீழ் 18 பயனாளிகளுக்கு 1.91 கோடி ரூபாய் மானியத்தை அவர் வழங்கினார்.
இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன்களை மேம்படுத்திட 50 மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய நேரடி பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள்; அரசு சட்டக் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், சிறந்த சட்ட நிறுவனங்கள், மூத்த வழக்கறிஞர்கள் அல்லது மாண்பமை உயர்நீதிமன்ற நீதியரசர்களிடம் பயிற்சி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கான பயிற்சி உதவித்தொகை திட்டத்தின்கீழ் 1,000 மாணவர்களுக்கு 1 கோடி ரூபாய் உதவித்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழில்நுட்ப படிப்புகளில் 60 விழுக்காடு அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்களது வேலைவாய்ப்பு திறன்களை வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் 17 மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் திறன் பயிற்சிக்கான பண உறுதி ஆவணங்கள், பட்டியலின மற்றும் பழங்குடியினரை தொழில்முனைவோர்களாக உருவாக்கிடும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், 28 பயனாளிகளுக்கு 2 கோடி ரூபாய் மூலதன மானியம் என மொத்தம் ரூ.265.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 9,371 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தங்கம், வெள்ளி விலை சரிவு
02 Mar 2026சென்னை, வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்து விற்பனையானது.
-
இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: லெபனானில் 31 பேர் உயிரிழப்பு
02 Mar 2026பெய்ரூட், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா இஸ்ரேலைத் தாக்கியதைத் தொடர்ந்து, லெபனான் மீதான இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 31 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அ
-
ஈரான் - இஸ்ரேல் மோதல்: வான்வெளியை மூடிய ஜோர்டான்
02 Mar 2026அம்மன், மத்தியக் கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக ஜோர்டான் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.
-
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி
02 Mar 2026தெஹ்ரான், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் வான்வழி தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்தனர்.
-
இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு: கண்காணிக்குமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியது உள்துறை அமைச்சகம்
02 Mar 2026புதுடெல்லி, ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாக மாநில அரசுகளுக்கு
-
தஞ்சையில் நாளை விஜய் பங்கேற்கும் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி
02 Mar 2026தஞ்சாவூர், தஞ்சாவூரில் நாளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்கும் த.வெ.க.
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ஈரான் திட்டவட்ட மறுப்பு
02 Mar 2026தெஹ்ரான், ஈரான் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் என்றும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்” என்றும் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லாரிஜானி தெர
-
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணையும் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி
02 Mar 2026லண்டன், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து களம்காண தயாராகயிருப்பதாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ் டெல்லி பயணம்: தொகுதி உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்பு
02 Mar 2026சென்னை, பரபரப்பான அரசியல் சூழலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ் டெல்லி சென்றார்.
-
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் வருகிற 23-ம் தேதி தீர்ப்பு
02 Mar 2026மதுரை, சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் வருகிற 23-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பிளஸ் 2 தமிழ் பொதுத்தேர்வில் 10 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை
02 Mar 2026சென்னை, பிளஸ்-2 பொதுத்தேர்வில் நேற்று நடைபெற்ற தமிழ் பொதுத்தேர்வில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: ரூ.6 லட்சம் கோடிக்கும் மேல் முதலீட்டாளர்களுக்கு இழப்பு
02 Mar 2026மும்பை, மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
-
போரை முன்கூட்டியே நிறத்த வேண்டும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் வலியுறுத்திய பிரதமர் நரேந்திரமோடி..!
02 Mar 2026புது டெல்லி, மேற்கு ஆசிய பிராந்தியத்தின் தற்போதைய பதற்ற நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடினார
-
தூத்துக்குடி தீப்பெட்டி குடோனில் தீ விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம்
02 Mar 2026சென்னை, தூத்துக்குடி தீப்பெட்டி குடோனில் தீ விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு த
-
போர் பதற்றம்: மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து உதவி கோரிய தமிழர்கள் 498 பேரும் பத்திரமாக இருப்பதாக அரசு தகவல்
02 Mar 2026சென்னை, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக தங்களை மீட்குமாறு அழைத்த இந்தியர்களில் தமிழர்கள் 498 பேர் அழைத்துள்ளதாக தமிழக அரசின் வெளிநாடு வாழ் நலத்துறை
-
தேர்வை பதற்றமின்றி எதிர்கொள்ளுங்கள்: மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து
02 Mar 2026சென்னை, பொதுதேர்வு எழுதும் மாணவர்கள் பதற்றமின்றி எதிர்கொள்ளுங்கள் என்று த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
-
சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.249 கோடி செலவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
02 Mar 2026சென்னை, சென்னை மாவட்டம் ஆலந்தூர் வட்டம் நந்தம்பாக்கத்தில் ரூ.249 கோடி செலவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடக்கம்: மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து
02 Mar 2026சென்னை, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
-
மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்: இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிப்பு
02 Mar 2026புது டெல்லி, மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் ராணுவ பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
-
உலகளாவிய மோதல்களுக்கு பேச்சுவார்த்தை, தூதரகங்கள் மூலம் தீர்வுகாண பிரதமர் மோடி வலியுறுத்தல்
02 Mar 2026புதுடெல்லி, மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகளாவிய மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகள் மூலம் தீர்வு காணப்படுவதையே இந்தியா ஆதரித்து வ
-
தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை நாங்கள் இன்னும் தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன் தகவல்
02 Mar 2026சென்னை, தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
ஈரானில் ஐ.ஆர்.ஜி.சி.யின் தலைமையகத்தை அழித்ததாக அமெரிக்க ராணுவம் அறிவிப்பு
02 Mar 2026வாஷிங்டன், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (ஐஆர்ஜிசி) தலைமையகத்தை அழித்துவிட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
02 Mar 2026- திருக்கோஷ்டியூர் செளமிய நாராயணப் பெருமாள், அழகர் கோவில் கள்ளழகர், திருச்செந்தூர் முருகன் ஆகிய கோவில்களில் தெப்பம்.
- திருமோகூர் காளமேகப்பெருமாள் யானை மலையில் சம்ஹார லீலை.
- நத்தம்
-
இன்றைய நாள் எப்படி?
02 Mar 2026


